அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாம் கந்தப்பெருமானுக்கு உகந்த தினமாகும் .. கந்தனைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் மனநிம்மதியையையும் .. மனமகிழ்ச்சியையும் தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
மலையேறி வந்து தன்னைத் தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில்கொண்டவனே ! ஆறுமுகப்பெருமானே!
முருகனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் ..? ..
சிறுகுழந்தைகளுக்கு அவன் - குமரனாகவும் ..
இளைஞர்களுக்கு அவன் - சிங்காரவேலனாகவும் ..
கலைஞர்களுக்கு அவன் - ஸ்கந்தனாகவும் ..
வீரர்களுக்கு அவன் - வேலாயுதனாகவும் ..
இல்லறத்தாருக்கு - வள்ளி .. தெய்வானையுடன் சுப்ரமண்யனாகவும் ..
உபதேசம் வேண்டுவோருக்கு - சுவாமிநாதனாகவும்
துறவிகளுக்கு அவன் - பழனி ஆண்டவனாகவும் .. மேலும்
பலரூபங்களில் நமக்கு வழித்துணையாக வருவான் திருத்தணி
முருகன் ..
வள்ளனான முருகப்பெருமானைப் போற்றுவோம் ! அனைத்து
நலன்களையும் பெற்றிடுவோமாக !ஓம் சரவணபவாய நமஹ் !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA
MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM MURUGA "
No comments:
Post a Comment