நாளை பங்குனி உத்திரம்!

முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திர நாளில்தான் மீனாட்சி- சுந்தரேஸ்வரர்; முருகன்- தெய்வானை; ராமன்- சீதா; லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி; சத்ருக்கனன்- சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.


தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரமே.

பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

பங்குனி உத்திர விரதத்தைக் கடைப் பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடிய தாகப் புராணங்கள் சொல்கின்றன.

பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர்
பெற்றான்.

No comments:

Post a Comment