SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ பங்குனி உத்திரத் திருநாள் நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. புதன்கிழமையும் .. பௌர்ணமித் திதியும் வரும் இந்த மங்களங்கள் மலரும் நன்நாளில் கலியுகவரதனுக்குரிய பங்குனி உத்திர விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது .. இன்றைய நாளில் தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!

பங்குனிமாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளிவழங்குவான் .. அந்த பூரணபௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காணமுடியாது .. களங்கமில்லாத சந்திரஒளி உடலுக்கும் .. உள்ளத்துக்கும் நிம்மதிதரும் ..
பல நற்பலன்களையும் கொடுக்கும் .. எனவே இந்நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது ..

பங்குனிமாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் முருகக்கடவுளுக்குரிய சிறப்புத் தினமாகக் கொண்டாடப்படுகிறது .. 
தமிழ்மாதங்களில் 12ம் மாதம் பங்குனி .. 
நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம் .. 
எனவே பன்னிரெண்டுகை வேலவனுக்கும் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது .. முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் 
( மஹோற்சவம் ) நடைபெறும் ..

இத்தினத்தின் சிறப்புகள் - 
மீனாட்சி கல்யாணம் - சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம்செய்வித்த நாளும் பங்குனி உத்திரநாளே !

சிவனின் மோனநிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம் .. 

பங்குனி உத்திரக்கல்யாணத் திருவிழா .. பசுவாகிய ஆன்மா .. பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகிறது .. இத்தினத்தில் அம்மயப்பனைக் குறித்து விரதமிருப்பர் .. 
பகற்பொழுது உணவு உற்கொள்ளாது .. இரவில் பால் .. பழம் அருந்தி விரதம் அனுஷ்டிப்பர் .. இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர் .. 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் .. இந்நாளில் நாம் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறிகிறது .. 

ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் ..
சீதாராமாவானார் .. 
லட்சுமணன் .. சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது .. 

சந்திரபகவான் கார்த்திகை .. ரோகிணிஉள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணியத்தினம் ..

மஹாலக்ஷ்மி விரதமிருந்து மஹாவிஷ்ணுவின் 
திருமார்பில் இடம் பிடித்தநாள் .. 
பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும்படியான வரத்தைப் பெற்ற நாள் .. 

இந்திராணி இந்திரபதிக்கு கிடைத்த பொன்னாள் ..
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் 
திருமணம் நடந்தது .. ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னர் திருமணமும் நடந்தது .. 
மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சி மாலையிட்ட நன்னாள் .. 

ஆலயம் சென்று இறைவனின் திருமணத்தைக்கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும் .. திருமணமானவர்களது வாழ்வில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி மகிழ்ச்சிகரமான வாழ்வு பெற 
ஆலயம் சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசித்து 
அவர்களது ஆசியையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! வாழ்க வளமுடனும் ... என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE POWER PROTECT YOU FROM ALL THE OBSTACLES AND LEAD YOU TO A HAPPY AND PROSPEROUS LIFE .. " OM MURUGA "

No comments:

Post a Comment