PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM ..GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. சிவராத்திரி தின நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. மாசிமாதம் 
அமாவாசைக்கு முதல்நாள் வரும் சிவராத்திரியே 
“ மஹாசிவராத்திரியாகும் “ இன்று விரதமிருந்து வழிபாடு செய்பவர்கள் சிவபெருமானின் பூரணதிருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவர் .. சிவாலயங்கள் இரவுமுழுவதும் திறந்திருக்கும் .. விடிய விடிய நான்குகால 
அபிஷேக ஆராதனைகள் நடக்கும் .. 

முதல்காலத்தில் - பால் ..
இரண்டாம் காலத்தில் - தயிர் ..
மூன்றாம் காலத்தில் - நெய் ..
நான்காம் காலத்தில் - தேன் .. ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும் ..

மஹாசிவராத்திரி சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி ..
சிவனை அர்ச்சிக்கவேண்டிய ராத்திரி ..
சிவனோடு ஐக்கியமாகவேண்டிய ராத்திரி ..
தேவர்களும் .. முனிவர்களும் வணங்கிநிற்கும் ஒப்பற்ற ராத்திரியுமாகும் ..

பிரளயகாலத்தின்போது பிரம்மனும் ..அவரால் சிருஷ்டிக்கப்பட்ட
அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டநிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜைசெய்தாள் .. பூஜையின்முடிவில் அம்பிகை
ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை தேவர்களும் .. மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே
அதாவது “ சிவராத்திரி “ என்றே கொண்டாடவேண்டும் என்று வேண்டினாள் ..

சிவராத்திரியன்று சூரியன்மறைந்ததுமுதல் .. மறுநாள்காலை
சூரியன் உதயமாகும்வரை தங்களை ( சிவனை ) பூஜைசெய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அருளவேண்டும் .. அருள்புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள் .. சிவபெருமானும்
அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்த இரவே
“ சிவராத்திரியாகும் “

பகல்பொழுது பரமேஸ்வரனுக்கும் .. இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம் .. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி
கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கே உரியதாயிற்று..

பிருங்கி முனுவர் சக்தியைவணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கிவந்ததால் கோபம்கொண்ட சிவகாமி அம்மை
எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம்சென்று .. மீண்டும் எம்பெருமானை நோக்கித்தவமிருந்து அத்தவத்தின்மூலம் அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி “ அர்த்தநாதீஸ்வராக” காட்சியளித்த இனியநாளும் இந்நாளே !

” ஓம் நமசிவாய “ என்று சொல்வோமே ! நன்மைகள் ஆயிரமாயிரம் பெறுவோமே ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA SHOWER HIS BENIGN BLESSINGS ON YOU AND YOUR FAMILY ON THIS SHIVRATRI DAY
AND MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " HAPPY SHIVRATRI "

No comments:

Post a Comment