விழுப்புரத்திலிருந்து மேற்கில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது அரகண்டநல்லூர்,தென்பெண்ணையாற்றின் வடக்கரையில் அமைந்த ஊரிது,இவ்வாற்றின் தென்கரையில்தான் திருக்கோவிலூர் அமைந்துள்ளது, திருக்கோவிலூர், வட்டத்தின் தலைநகர்.அறம்கண்டநல்லூர் எனும் பெயர் மறுவி அரகண்டநல்லூர் ஆனதாக வரலாறு,இவ்வூருக்கு வரலாற்று பெருமை சேர்ப்பதாக அமைந்தது "அதுல்ய நாதேஸ்வரர் ஆலயம்"தென்பெண்ணை ஆற்றையொட்டி மலைப்பாறையின் மீது அமைந்துள்ளது இந்த சிவாலயம்,பஞ்சபாண்டவர்கள் இங்கு தங்கி வழிபட்டதாக வரலாறும் உண்டு,இவ்வாலயத்தின் ஒரு பகுதியில் பஞ்சபாண்டவர் தங்கியிருந்தாக சொல்லப்படும் பஞ்சப்பாண்டவர் குகை,பாறையின் மீது அழகிய நீரூற்று,இங்குள்ள குகை ஒன்றிலிருந்து திருவண்ணமலைக்கு செல்ல குகைப்பாதை உள்ளதாக ஊர் பெரியவர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன் ஆனாலும் தற்போது அக்குகை மூடப்பட்டுவிட்டது, மேலும் பெண்ணையாற்றை நோக்கி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இராஜகோபுரம்,இந்த படர்ந்த மலைப்பாறையின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் விரிந்துகிடக்கும் பிரமாண்டமான குளமும் இவ்வாலயத்தின் சிறப்பாகும்,நானும் இவ்வூரை சேர்ந்தவன் என்பதால் இக்கோவிலின் அனைத்து பகுதிகளும் எனக்கு அத்துப்படி, இராஜகோபுரத்திலும்,இவ்வாலய வளாகத்திலும் அமைந்துள்ள கலைநுட்பம் மிகுந்த சிற்ப்பங்களை நண்பர்களோடு சேர்ந்து ரசித்து வியந்து போவோம்...



No comments:

Post a Comment