SWAMI SARANAM ..GURUVE SARANAM



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. மகளீர்தின நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று அங்காள பரமேஷ்வரிக்கு உகந்த மாசிமாத அமாவாசை தினமுமாகும் .. இன்றையநாளில் 
அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓங்கார உருவினளே ! ஓம் சக்தி ஆனவளே !
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே ! 
பரசித்சொரூபமாக பரவியே நின்றவளே ! 
அருளிடும் அம்பிகையே ! அங்காள ஈஸ்வரியே !
எமை காத்திடுவாயாக !!

அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக
“ மயானக்கொள்ளை “ எனும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .. நம்பியவர்களைக்காத்து .. இரட்சித்து ..
அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக் காட்டும் தத்துவ விழா என்றாலும் மிகையில்லை .. 

இன்றையநாளில் அனைத்து அங்காள பரமேஷ்வரி ஆலயங்களிலும் “ மயானக்கொள்ளை விழா “ நடைபெறும் .. 
இவ்விழாவின் அடிப்படைக் காரணம் சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் ..

பிரம்மதேவனுக்கும் ஈசனைப்போன்றே ஐந்துதலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்கவேண்டும் என்று
ஆணவம் கொண்டார் பிரம்மா .. அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மனின் ஒருதலையைக் கொய்தார் சிவன் .. அதன் காரணமாக சிவனை “ பிரம்மஹத்தி தோஷம் “ பற்றிக் கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது .. அதை அவர் கீழேபோட்டாலும் மீண்டும் .. மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. 

இவ்வாறு 99வது முறை நடந்தநிலையில் அதைக்கீழே போடாமல் சிறிது கையிலேயே வைத்திருங்கள் என்று பார்வதிதேவி சிவனிடம் கூறினாள் .. அவரும் அவ்வாறே செய்ய
பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவரது கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதையே பிச்சைப்பாத்திரமாக ஏந்தி ஈசன் 
பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது .. அப்பாத்திரத்தில் போடப்படும் உணவெல்லாம் கபாலமே விழுங்கிவிடுவதால் 
உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை .. 

இந்நிலையில் பிரம்மாவின் தலைகொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதிதேவி அது கபாலமாகமாறி சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம்கொண்டு
“ கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக “ என சாபமிட்டாள் .. அதன்படி பார்வதிதேவி பூவுலகில் பலதலங்களில் அலைந்து 
முடிவில் “ மலையனூர்” வந்தாள் .. அங்கே அங்காள பரமேஷ்வரியாக கோவில் கொண்டாள் .. 

அப்பொழுது ஈஸ்வரனும் மலையனூர் வர அங்காள பரமேஷ்வரி
சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள்
எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட அங்குவந்த மஹாலக்ஷ்மி பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள் .. அதன்படி பரமேஷ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள் .. அதை கபாலம் உண்டுவிட்டது .. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழேபோட்டாள் .. உணவின் 
சுவையால் கவரப்பட்ட கபாலம் அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழேபோனது .. 

அப்போது அங்காள பரமேஷ்வரி விஸ்வரூபமெடுத்து பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடையமுடியாதபடி 
அதைத் தன்காலால் மிதித்து பூமியினுள் ஆழ்த்திவிட்டாள் ..
ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது .. 

அன்னையைப் போற்றுவோம் ! சகல நன்மைகளையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY " MAA SHAKTHI " BRING YOU 
COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH 
HAPPINESS .. AND PROSPERITY .. " JAI MAA SHAKTHI " 
OM SHAKTHI OM ..

No comments:

Post a Comment