PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பஞ்சமித் திதியாகிய இன்று (மாலைவரை) வெற்றியைத் தடங்கலின்றி தேடித்தரும் உன்னத தேவதையாகிய அன்னை வராஹியைத் ( வாராஹி ) துதித்து தங்களனைவருக்கும் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற வாழ்த்தி வணங்குகின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள் .. அன்னை உடனே மாற்றம் தருவாள் .. அவளை மனதார நினைத்தாலே வெற்றி அடையும் இலக்கையும் அளித்திடுவாள் ..
வராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை .. பகைவருக்கோ பெருநெருப்பு .. பயம் .. கவலை .. நடுக்கம் .. எதிர்ப்பு .. பகை
என்று நினைத்து .. நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வராஹி ! 
”வராஹி அம்மன் ” இந்த நாமத்தை கேட்டாலே பலபேருக்கு பயம்வரும் .. அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி !
வராஹி வழிபாட்டிற்கு முக்கியம் உள்ளத்தூய்மையும் .. சுத்தமும் .. நற்சிந்தனைகளுமே ! தேவகுணமும் .. மிருகபலமும் கொண்டவள் இதனால்தான் உக்கிரதெய்வம் என்றும் சொல்வார்கள் .. தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும் .. உண்மையாக இருந்தால் வராஹி தரிசனம் தருவாள் ..
அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக உலகத்திற்கே தாயாக விளங்கும் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் அங்குசத்திலிருந்து தோன்றி ஸ்ரீலலிதாவின் மெய்காப்பாளினியாகவும் நால்வகை படைத்தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குகிறாள் ..மனித உடலும் .. வராஹி (பன்றி) முகமும் கொண்டவள் கோபத்தின் உச்சம் தொடுபவள் ஆனால் அன்பிலே .. ஆதரவிலே .. பெற்ற தாயைப்போன்றவள் ..
வராஹி காட்டிய வழி ---
வராஹி என்னும் வெற்றி தெய்வத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோயிலைக் கட்டுவத்ற்கு பல இடங்களைக் தேர்வு செய்தும் இறைவனிடம் இருந்து உத்தரவு ஏதும் கிடைக்கப் படவில்லை ..
ஒருநாள் வேட்டைக்குச் சென்றபோது ஓர் இடத்தில் ராஜராஜனுக்கு எதிராக பன்றி ஒன்று எதிர்த்து நின்றது .. அதனைத் துரத்திச் சென்றபோது போக்குக்காட்டி பல இடங்களுக்குச் சென்று ஒருபெரிய திடலில் சுற்றிச் சுற்றிவந்து படுத்துக் கொண்டது வியப்பளித்தது ..
வராஹமாக இருப்பதால் அதனைக் கொல்லாமல் துரத்தியும் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியைத் தோண்டியது .. அரண்மனை திரும்பிய ராஜராஜன் அரசஜோதிடரை அழைத்து விவரம் கேட்க கோயில்கட்ட இடத்தினை வராஹிதேவி தேர்ந்தெடுத்து கொடுத்திருப்பதைத் தெரிவித்தார் ஜோதிடர் ..
அந்த இடத்தில் பெரியகோயில் கட்டுவதற்கு முன் வெற்றிதேவதை வராஹிக்கு சிறிய தனித்தொரு சந்நிதியை அக்னிமூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு .. பின்னர் பணியைத் துவக்கி தேவியின் அருளால் உலகம் போற்றும் தஞ்சைக் கோயிலைக் கட்டினார் ராஜராஜன் .. தற்போதும் ராஜராஜன் கடைபிடித்த முறையிலேயே எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவங்குவதானாலும் முதலில் வராஹி பூஜை செய்தபின்னரே துவங்கும் வழக்கம் பெரியகோயிலில் உள்ளது ..
நியாயமாக வேண்டுவோருக்கு வேண்டியதை வேண்டியவாறே அருளும் அன்னை வராஹியைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போம் ! வெற்றி நிச்சயம் !!
“ ஓம் ஸ்ரீமஹாவராஹி பத்மபாதம் நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS VARAAHI .. MAY YOU BE BLESSED TO ACHIEVE THE GOAL OF SUCCESS AND BEST HEALTH AND HAPPINESS .. 
" JAI MAA VARAAHI "

No comments:

Post a Comment