PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' CHATHURTI ' WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND SHOWER YOU WITH HAPPINESS .. GOOD FORTUNE .. AND PROSPERITY .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வேண்டுவன நல்கும் கருணைப் பெருங்கடலாகிய கணபதியை சதுர்த்தித் திதியாகிய இன்று பிரார்த்தித்து தங்களனைவரது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும்படி வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த நாளாகும் ..வளர்பிறை சதுர்த்தியாகிய இன்றைய சதுர்த்தியை ‘ வர சதுர்த்தி ‘ என்றும் .. சுக்லபட்ச சதுர்த்தி என்றும் .. எல்லா வரமும் தரும் சதுர்த்தி என்றும் அழைப்பர் .. இதன் வழிபாடுகளை மதிய நேரத்தில் செய்வது நல்லது .. 

வளர்பிறை சதுர்த்தியில் ( இன்று ) வானில் சந்திரனை பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடுவிளைவிக்கும் என்பது பெரியோர்வாக்கு .. 

ஸ்ரீகிருஷ்ணர் சதுர்த்தி தினத்தில் வானில் சந்திரனைப் பார்த்ததால் அவப்பெயர் ஏற்பட்டு அதை நீக்கவேண்டி ஸ்ரீவிநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியாகிய ‘சங்கடஹர சதுர்த்தியில் ‘ பூஜைசெய்தார் .. விநாயகரும் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார் ..

விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி .. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது .. ஐந்து கரத்தானனை வணங்குவோருக்கு ஞானம் பெருகி நலம்பல
பெருகும் .. 

தூக்கிய துதிக்கையால் காத்திடவேண்டும் தூங்கக் கரிமுகத்து நாயகனே ! விநாயகா ! உண்மை .. ஞானம் .. செல்வம் .. பெருக வேண்டியோர்க்கு வேண்டியவாறு வரங்கள் அருளும் விநாயகனே ! நின் மலர்பாதம் பணிகின்றோம் ! காத்தருள்வாயாக ! 

” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment