PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye SarfanamIyyappa...Panvel Balagan Patham Potri...Guruve Saranam Saranam

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A 
" HAPPY AKSHAYA TRITIYA " MAY GODDESS LAKSHMI SHOWER YOU WITH GOOD LUCK AND SUCCESS WHICH NEVER DIMINISHES
" JAI MAA LAKSHMI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் அக்ஷ்யதிருதியை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. அன்னை மஹாலக்ஷ்மிக்கு உகந்த திதியாகிய திருதியையும் வருவதால் ஆலயம் சென்று அன்னையை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் அன்னையின்அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் வாழ்வில் ஆனந்தமும் .. செல்வமும் பெருகிடவும் வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

இன்று பாராயணம் செய்யவேண்டிய அலைமகள் துதி - 
ரத்ன பூபஷண பூஷாட்யாம் சோபிதாம் !
பீதவாசஸா ஈஷத் தாஸ்யாம் !
ப்ரஸந்தாஸ்யாம் சச்வத் ஸுஸ் திரயௌவனாம் !
ஸர்வ சம்பத் ப்ரதாத்ரீம் ! மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம் !! 

பொருள் -
நட்சத்திரங்கள் .. திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பன .. சித்திரைமாத அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “ அக்ஷ்யதிருதியை “ என போற்றப்படுகிறது .. இன்று செய்யும் ஜபம் .. ஹோமம் .. தர்மம் எல்லாமே அக்ஷ்யமாக வளர்ந்துகொண்டே போகும் .. தாரித்ரியம் விலகும் என்பது உறுதி .. வாட்டிடும் வறுமை தொலைந்து .. இனிமையும் .. வளமையும் வாழ்வில் கூடும்

“ அக்ஷ்யம் “ என்றால் வளர்வது .. குறையாதது என்று பொருள் .. இந்நாளைப்பற்றி புராணங்களிலும் .. தர்ம சாஸ்திரத்திலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது .. அவை - 
பகவான் கிருஷ்ணரின் பால்யநண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார் .. ஒருபிடி அவலை தன்மேலாடையில் முடிந்துகொண்டு கிருஷ்ணரை சந்திக்க புறப்படுகிறார் .. அவரை நன்கு உபசரித்த கிருஷ்ணபகவான் குசேலர் அன்போடு அளித்த அவலை மகிழ்ச்சியுடன் ஏற்று ..
உண்டு .. அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து
“ அக்ஷ்யம் உண்டாகட்டும் “ என்று வாழ்த்தி வழியனுப்புகிறார் .. அதே கணத்தில் குசேலனின் குடிசைவீடு மாடமாளிகையாக மாறுகிறது .. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடிகொள்கின்றன .. இந்த அற்புதம் நிகழ்ந்ததும் அக்ஷ்யதிருதியை நாளிலே ! 

கௌரவர் சபையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்நாளே ! என்கிறது வியாசபுராணம் .. 

மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது .. சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிக்க்ஷை அளித்தநாளுமாகும் .. ஐஸ்வர்யலக்ஷ்மி அவதரித்தநாள் .. சங்கநிதி .. பத்மநிதியை குபேரன் பெற்றநாள் .. மஹாவிஷ்ணுவின் வலமார்பில் மஹாலக்ஷ்மி இடம்பிடித்தநாள் .. எனபல சிறப்புகளை உடையது இந்நாள் ..

” பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான் “ என்பது ரமணர் வாக்கு .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் .. தர்மங்கள் .. பலமடங்கு அதிகமாக உதவி செய்தவருக்கே ஏதாவது ஒருவகையில் திரும்ப கிடைக்கும் 
மேலும் .. மேலும் தானதர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தித் தரும் .. 

ஏழை நோயாளிகளுக்கு ..சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேஷ்டி ..சேலை.. போர்வை தானம் கொடுக்கலாம் .. ஏழைமாணவர் கல்விக்கு உதவலாம் . ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு .. இனிப்பு வழங்கலாம் .. பசு .. நாய் .. பட்சிகளுக்கு உணவளிப்பதன்மூலம் மன அமைதி .. செல்வ வளம் ஏற்படும் .. 

சமீபகாலத்தில்தான் தங்கம்வாங்கும் வழக்கம் உருவானது 
தங்கள் பொருளாதார நிலைக்கு தக்கவாறு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சிறப்பு .. குறைந்தபட்சம் உணவு பொருட்களையாவது வாங்குவது சிறப்பு .. அரிசி .. உப்பு .. வாங்கினாலும் சிறப்பானதுதான் .. 

“ மகிழ்வித்து மகிழ் “ என்று சொல்வார்கள் .. எனவே மற்றவர்கள் மகிழும்வகையில் தானதர்மங்கள் செய்து 
பலபுண்ணியங்கள் பெற்று .. ஆயுள் .. ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment