GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE KARTHIKAI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM ALL THE OBSTACLES & SHOWER YOU WITH HAPPINESS .. " OM MURUGA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகை நட்சத்திரமாகிய இன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. ஆலயம் சென்று ஆறுமுகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் வேண்டிய பொருட்செல்வத்தையும் .. அருட்செல்வத்தையும் .. மற்றும் இகபர சௌபாக்கியங்களையும் தந்தருளுவான் ஆறுமுகனே !
ஓம் கார்த்திகேயாய வித்மஹே !
சக்திஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !!
ஞானத்தின் வடிவமான முருகப்பெருமான் ஞானப்பழத்திற்காக அம்மா .. அப்பாவான பார்வதி .. பரமேஸ்வரனிடம் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பழனிக்குன்றத்தில் நின்றது புராணக்கதை ..
அன்றுமுதல் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள் ..
தடைகள் .. தோஷங்கள் .. கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன .. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும் .. உள்ளமும் தூய்மையாகி
மன அமைதியும் .. சந்தோஷமும் அடைகிறது ..
“ ஆறுமுக உருவாய்த் தோன்றி ..
அருளோடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில்
வீற்றிருந்து அருளினானே “
என்று கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது .. மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயனை நினைந்து விரதமிருப்பது சிறப்பாகும் ..
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற
அந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது .. பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த அன்னை பார்வதிதேவி ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள் ..
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்களே ! அவர்களைப் போற்றும் வகையிலேயே கிருத்திகை விரதநாள் அனுஷ்டிக்கப்படுகிறது .. நாமும் ஆறுமுகனைப் போற்றுவோம் ! அவனருள் பெறுவோமாக !
” ஆறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடிவருவான் ! அன்பு பெருகி அருள்புரிவான் அந்தக் கருணை உருவான குருபரனே ! என்றுமே கைவிடாமல் ஆளுவான் நம் இதயக் கமலத்தில் “ ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும்
நலமுடனும்

No comments:
Post a Comment