SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' EKADASI ' MAY LORD VISHNU FULFILL ALL YOUR DESIRES AND FREE YOU FROM ALL SINS AND PROTECT YOU FROM ALL EVILS TOO .. ' OM NAMO NAARAAYANAAYA ' 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்கிழமையாகிய இன்று அனைத்து பாவங்களையும் போக்கும் ‘பாபவிமோசனி ‘ எனும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .. பகவானைப் பிரார்த்தித்து அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவோமாக .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி அனைத்து கொடிய பாவத்திலிருந்தும் விடுதலை அளித்து காத்து அருளும் .. எவர் ஒருவர் நற்பணி (சத்கர்மா) செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டு பேராசை .. மோகம் போன்ற தீயசக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார் .. 

ஆனால் .. பாபவிமோசனி ஏகாதசி விரதம் சகல பாவங்களிலிருந்தும் அனைவருக்கும் விடுதலை அளிப்பதுடன் இறுதியில் ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கிறது .. 

இந்தவிரதத்தின் பிரபாவத்தால் அனைத்து பாவங்களும் அழியப் பெறுகின்றன .. ஏகாதசி விரத மஹாத்மியத்தைப் படிப்பதாலும் .. அல்லது கேட்பதாலும் ஓராயிரம் பசுக்களை 
(கோ) தானம் செய்த புண்ணியபலனும் கிட்டுகிறது .. 

விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! கொடிய பாவங்கள் அனைத்தும் அழியப்பெற்று நன்மைகள் ஆயிரம் பெறுவோமாக ! ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ!
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment