SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY YOU BE BLESSED WITH BEST HEALTH .. STRENGTH .. AND ENERGY TOO .. " JAI SURYA DEV " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையும் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நாளில் சூரியபகவானைத் துதித்து அக்னி நட்சத்திரக் காலகட்டம் நடைபெறும் இந்நாட்களில் நம் உடல்நிலை பாதிக்காமலிருக்க காலைவேளையில் பூஜைஅறையில் சூரியனுக்குரிய மாக்கோலத்தை பூஜைப்பலகையில் இட்டு சூரியகாயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிக்கலாம் .. சூரியகாயத்ரி - ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !! அக்னி நட்சத்திரம் - அக்னி நட்சத்திரம் என்ற கோரவெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும் .. கத்திரிவெயில் என்று கூறும் சித்திரை மாத முதல் பத்து நாட்களும் .. வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும் .. சிலவருடங்களில் 25 நாட்கள் கூட இருக்கும் என்பர் .. இந்நாட்களில் பூமியும் சூரியனுக்கு மிக அருகே இருக்கும் .. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி .. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் .. எனவே இதை அக்னி நட்சத்திரம் என்கிறோம் .. முன்னொருகாலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி “ சுவேதகி யாகம் “ செய்தார்கள் .. தொடர்ந்து நெய் உண்டதால் அக்னிதேவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால் தான் தீரும் .. எனவே அக்னிபகவான் காண்டக வனத்தைத் தேர்ந்தெடுத்ததால் அந்த வனத்தில் உள்ள அரக்கர்களும் .. கொடிய .. சாந்தமான விலங்குகளும் .. தாவரங்களும் தங்களை அக்னிதேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன “ அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்” என வருணன் கூறியதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பொழிகின்றான் என்னைக் காப்பாற்றுங்கள் “ என முறையிட .. திருமால் அர்ச்சுனனைப் பார்க்க அர்ச்சுனன் வான்நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி .. மழைநீர் வானத்தில் விழாமல் தடுத்தான் .. அக்னி வனத்தை எரிக்கலானான் .. அப்போது கண்ணன் அக்னியே ! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன் அதற்குள் உன்பசியையும் .. பிணியையும் போக்கிக்கொள் என்றார் .. அதன்படி 21நாட்கள் வனத்தை எரித்து விழுங்கிய நாட்கள் தான் “ அக்கினி நட்சத்திர நாட்கள் ” .. அக்கினி நட்சத்திர நாட்களில் முருகனையும் .. சூரியனையும் .. மற்றும் பரணிக்குரிய - துர்க்கை .. ரோஹிணிக்குரிய - பிரம்மன் .. கிருஷ்ணன் .. கார்த்திகையின் அதிதேவதை - அக்னி .. ஆகியோரையும் வழிபட்டு அகமும் புறமும் குளிரும் வண்ணம் தானதருமம் செய்து சுட்டெரிக்கும் அக்னியிலிருந்து நிவாரணம் பெறுவோமாக .. ஓம் சூர்யாய நமஹ ! வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .

No comments:

Post a Comment