PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM SARANAM.....SWAMIYE SARANAM IYYAPPA...

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BEAUTIFUL AND A BLESSED SUNDAY WITH FULL OF JOY AND PEACE IN YOUR HEART .. MAY LORD SURYA SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவரது பிரச்சினைகள் யாவும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் பெற்றிட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

ஜோதிடசாஸ்திரம் சூரியனை நவக்கிரகநாயகனாகப் போற்றுகிறது .. மனிதவாழ்விற்கும் .. தாழ்விற்கும் .. இன்பத்திற்கும் .. துன்பத்திற்கும் காரணம் கிரகங்களே ! இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன் .. பிரபஞ்சத்தையும் கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார் .. 

ஒருவரது ஜாதகத்தில் சூரியபலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை .. ஆட்சி .. அதிகாரம் அமையும் .. ஆத்மா .. தந்தை .. தலை .. சரீரம் .. உத்தியோகம் .. வலதுகண் .. வைத்தியம் .. தைரியம் .. புகழ் .. உடல்நலம் ..
ஆகியவற்றிற்கு சூரியனே காரணகர்த்தா .. 

சூரியபகவானே லோகநாயகனான முழுமுதற் கடவுள் என்று சூரியபுராணம் குறிப்பிடுகிறது .. 
சிவனுக்கு - கைலாயம் ..
நாராயணனுக்கு - வைகுண்டம் ..
பிரம்மாவுக்கு - சத்தியலோகம் போல 
சூரியனுக்குரியது - சூரியலோகம் .. 

சூரியன் நம் ஒவ்வொருவருக்கும் கண்கண்ட தெய்வம் .. அதனால் தான் திருவள்ளுவர் தன் முதல் குறளில் 
’ அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முற்றே உலகு ‘
என்று அழைக்கப்படுவது சூரியனே ! இறைவனான பரம்பொருளின் பிரதி அம்சமாக சூரியன் நமக்கு காட்சியளிக்கிறது .. 

சூரியபகவானை தினமும் வணங்கினால் உலகத்தில் சகல சௌபாக்கியங்கள் அனைத்தையும் பெறமுடியும் ..
மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் ஆற்றல் சூரிய வழிபாட்டிற்கு மட்டுமே உள்ளது .. யார் ஒருவர் சூரியனை மனம் உருகி .. மனம் ஒன்றி வழிபாடு செய்கிறாரோ அவருக்கு வெற்றி .. புகழ் .. உடல்நலம் .. ஆளுமைத்திறன் 
செல்வாக்கு .. மங்களம் போன்ற அனைத்தும் ஒருங்கே வந்துசேரும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ என்று சொல்லி வணங்குங்கள் .. உங்களை வாழ்வின் சுப உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் .. தினமும் ஆதித்யஹ்ருதயம் பாராயணம் செய்து வரவும் .. வாழ்வில் தடைகள் நீங்கும் .. அனைத்து சிக்கல்களும் இல்லாமல் போகும் .. 

“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment