GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM....SWAMIYE SARANAM IYYAPPA...


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் ..இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும்பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான் .. இவருக்குப் பிறப்பும் இல்லை .. இறப்பும் இல்லை .. சிவவழிபாட்டினைத்தான் சைவம் என்று போற்றுகின்றோம் ..

உலகத்தின் மிகப்பழமையான வழிபாடும் சிவவழிபாடுதான் .. பண்டையகால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ .. காலகட்டங்களில் சிவவழிபாடு நடந்திருப்பது அகழ்வாராச்சிகளி ( மூலம் ) அறியமுடிகின்றது .. 

வேதங்கள் போற்றும் வேதநாயகானாக விளங்குபவர் 
சிவனே ! சுபமங்களத்தை அருளுபவர் ..பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும் .. உடுக்கை .. ஒலியிலிருந்தும் சப்தங்கள்தோன்றி வேதமந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாசபகவான் ஒருங்கிணைந்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் .. ( இருக் ..யஜுர் .. சாமம் அதர்வணம் ) வேதங்களாகத் தொகுத்தார் ..

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால் .. சிற்பசாஸ்திரங்களின்படி சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொருவடிவத்திற்கும் ( நடராஜர் .. ஸோமஸ்கந்தர் ) 
கொப்பூழ் எனும் தொடர்பு அமைப்பதில்லை .. 

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர் .. திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர ஸர்வலோகங்களிலும் திகழும் சதாசிவர் .. 

சிவபெருமான் பக்தர்களை காக்க எடுப்பது அவஸரம் .. தக்கசமயம்வரும்போது தோன்றி ரட்சித்துவிட்டு மறைந்துவிடுதல் .. 

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றையும் விரைவில் வழங்குவதில் வல்லமைமிக்க சிவனைப் போற்றி வணங்குவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் !


 

No comments:

Post a Comment