PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARANAM...SWAMIYE SARANAM IYYAPPA.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE ELIMINATE ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபடுவது சாலச் சிறந்தது .. த
ங்களனைவருக்கும் வேலவன் அருளால் நல் ஆரோக்கியம் .. புகழ் .. செல்வம் . யாவும் பெற்று வளமான வாழ்வு அமைந்திட கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யப் ப்ரசோதயாத் !! 

”அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “
அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை 
மீட்டவர் .. முருகப்பெருமான் .. இம்முருகப்பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் நெறி 
கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின்
சொல்லொணாத் துன்பம் நீங்கப்படுவதுடன் .. தினமும் நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் மக்கட்பேறும் .. பதினாறு பேறுகளும் 
( செல்வங்களும் ) கிடைக்கப்பெறுவர் .. 

அனாதியாகவே செம்பில் களிம்பு போன்று ஆன்மாக்கள் ஆணவ மலத்தால் பீடிக்கப்ப்ட்டுள்ளனர் ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து இறுதியில் பிறப்பு .. இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் 
இரண்டறக் கலந்தற்கேயாகும் எனவே முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்மவினைகளை இலகுவில் அடையாலம் என்பது 
அனுபவம் பெற்ற முருக பக்தர்களின் அருள்வாக்கு .. 

“ மைந்தன்வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ “ 
என்னும் வரிமுலமும் .. 
“ எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் “ என்னும் வரிமூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதனையும் அறிய முடிகிறது ..கந்தசஷ்டிகவசம் .. கந்தபுராணம் போன்ற முருகன் பெருமைகளைக் கூறும் நூல்களைப் பாராயணம் செய்தல் மிகச் சிறந்த பயனைத் தரும் .. 

புனிதமான இந்த சஷ்டிதினத்தில் முருகனைப் பிரார்த்தித்து இகபர இன்பங்களைப் பெற்று மங்களவாழ்வு வாழ்வோமாக .. “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment