PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE SOMVAR DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE AND FULFILL ALL YOUR DESIRES TOO .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் .. தடைகளும் பனிபோல் நீங்கிடவும் .. இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமவாரம் என்பது வாரநாட்களில் திங்கட்கிழமையைக்
குறிப்பது .. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதமாகும் .. ஆதலால் திங்கட்கிழமைகளில் இவ்விரத்தத்தை அனுஷ்டிக்கின்றனர் .. 

தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைபிடித்துதான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான் .. இந்த சோமவார விரதத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் .. என புராணங்கள் போற்றுகின்றன .. 

மேலும் வசிஷ்டமுனிவர் இந்த விரதத்தைக் கடைபிடித்துதான் அருந்ததியை மனைவியாக அடைந்தார்
திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததிபார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள் .. அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி .. 

சிவபெருமானே கூறிய விரத நியதிகள் - 
சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள் என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் .. ஒருசமயம் இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதிதேவி சிவனிடம் கேட்டார் ..

அதற்கு சிவன் இந்த விரதகாலத்தில் காலையில் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடித்து அன்றாடம் தவறாது சிவபூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாக நினைத்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும் .. 

அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து சிவசிந்தனையுடன் இருக்கவேண்டும் .. வீட்டில் விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன் அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார் .. 

இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப்பெற்று வருகிறது விரதத்தை ஆண்களும் கடைபிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறுவர் .. 

சிவனைப்போற்றி அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி காண்போமாக .. வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment