Swamiye saranam iyyappa...Guruve Saranam ....Panvel Balagane saranam saranam....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE LORD MURUGANS BESTOW BLESSINGS & MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவருக்கும் கந்தனின் அருட்கடாக்ஷ்ம் பெற்று தீமைகளிலிருந்தும் காத்து .. வேண்டிய வரங்களைவேண்டியவாறே தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

மிகப்பழமைவாய்ந்த தமிழ் இலக்கியமாகிய தொல்காப்பியம் தமிழக நிலப்பரப்பைக் குறிஞ்சி .. முல்லை .. மருதம் .. பாலை .. நெய்தல் என ஐந்துவகையாகப் பிரிக்கிறது .. இவற்றில் மலையைச் சார்ந்த பகுதியாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளே முருகப்பெருமான் ! 

நக்கீரன் பாடிய “ திருமுருகாற்றுப்படையில் “ எந்த முருகனிடம் சென்று வழிபட்டால் இலகுவாக திருவருள் கிடைத்துவிடும் என்பதை ஆற்றுப்படையாக (வழிகாட்டியாக) முன்மொழிந்துள்ளார் .. அவற்றுள் குறிப்பாக முருகனின் ஆறுதிருத்தலங்களே ஆற்றுப்படை வீடுகள் என அழைக்கப்பெற்று பின்னர் அவை
“ ஆறுபடை வீடுகள் “ என அழைக்கப்பெறுகின்றன .. 

முருகனின் ஆறுபடைவீடுகள் - - 
1 - பழநி - 
ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும் .. ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம் கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி .. இங்குள்ள முருகனின் சிலை நவபாஷனத்தால் ஆனது .. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் .. பஞ்சாமிர்தம் .. விபூதி ஆகியவற்றை உற்கொண்டால் உடல் நலம்பெறும் என்று நம்பப்படுகிறது .. 

2 - திருச்செந்தூர் - 
கடல் அலை “ ஓம் “ என்ற ரீங்காரத்துடன் கரைமோதும் 
‘ அலைவாய் ‘ என்னும் திருச்செந்தூர் முருகன் சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும் .. சூரபத்மன் தேவர்களையும் இந்திரனையும் அவன் மனைவியையும் சிறைசெய்து கொடுமை செய்தான் .. அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார் .. சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர் .. போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும் .. அதனால்தான் சஷ்டியில் விரதமிருந்து முருகனை வழிபடுகின்றனர் .. 
போரின் இறுதியில் சூரபத்மன் மாமரமாக நிற்க முருகன் தன் அன்னை தந்த சக்திவேலால் மரத்தை பிளக்கிறார் அதில் ஒருபாதி மயிலாகிறது .. மற்றொருபாதி சேவலாகிறது .. மயிலைத் தன் வாகனமாகவும் சேவலைத் தன்கொடியாகவும் ஏற்றுக்கொள்கிறார் .. 

3 - திருப்பரங்குன்றம் -
தேவேந்திரனையும் .. தேவர்களையும் சிறைமீட்டதற்கு நன்றிக்கடனாக இந்திரன் தன்மகள் தெய்வானையை போரில் வெற்றிபெற்ற மறுநாளே முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார் .. முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடமே திருப்பரங்குன்றம் .. 

4 - சுவாமிமலை - 
தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமிமலை .. பிரணவமந்திரத்திற்குப் பொருள்தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கிறார் .. இதைக்கேள்வியுற்ற சிவபெருமான் எனக்கும் .. பிரம்மாவுக்கும் கூடத்தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா ? என்று கேட்கிறார் .. அதன்படி உபதேசிப்பவன் குரு .. கேட்பவன் சீடன் என்றமுறையில் முருகன் ஆசனத்தில் அமர அவர்கீழ் சிவன் அமர்ந்து உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை .. 

5 - திருத்தணி - 
முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல்மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி .. வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்துகொடுக்க மறுத்து முருகனுடன் போரிட்டு மடிகிறான் .. பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து போரிட்ட கோபம்தணிய நின்ற மலையே தணிகைமலை ஆகும் .. அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது .. 

6 - பழமுதிர்ச்சோலை - 
நக்கீரர் .. “ இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவானே “ என்று முருகனின் ஆறாவதுபடைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப்படையை நிறைவுசெய்கிறார் .. குறிஞ்சிக்கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும் .. 

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளையும் வழிபட்டு நோய்நீங்கி துன்பங்கள் அகன்று .. மனம் அமைதிபெற்று .. வளமான வாழ்வைப் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment