GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A BLESSED SOMVAR TOO .. MAY LORD SHIVA DESTROY ALL KINDS OF SINS AND SORROWS & SHOWER YOU WITH HAPPINESS .. GOOD HEALTH .. AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .SWAMIYE SRANAM IYYAPPA...GURUVE SARANAM..PANVEL BALAGANE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பௌர்ணமித்திங்களும் .. சோமவார விரதமும் சேர்ந்துவருவது மிகவும் சிறப்பாகும் .. சிவபெருமானை ஆலயம் சென்று வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும் ..
தங்களனைவரும் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் கிட்டிட எல்லாம் வல்ல சர்வேஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

பூரணை என்பது சந்திரன் முழுவட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும் .. பூர்ணிமா என்றும் பௌர்ணமி என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது .. இந்துசமயத்தில் சந்திரன் கடவுளாகக் கருதப்படுகிறார் .. அவர் தட்சனின் குமாரிகள் இருபத்து ஏழுபேரை மணந்தபோதிலும் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அதிகம் பிரியமாய் இருந்தார் .. அதனால் கோபம்கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப்போகச் சாபம்கொடுத்தார் .. 

பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாகக் குறைந்து இறுதியில் ஒன்று மட்டுமே மீதமிருக்கும்போது சிவபெருமானை தஞ்சமடைந்தார் சந்திரன் .. சந்திரனைக் காக்க தனது ஜடாமுடியில் வைத்துக்கொண்டார் .. எனினும் தட்சனின் சாபம் முழுவதும் தீராமல் பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும் .. பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரமளித்தார் .. சோமவார விரதத்தை மேற்கொண்டதால் சிவபெருமானின் தலையில் இருக்கும் பேற்றினையும் பெற்று அனைத்து பாவங்களிலிருந்தும் .. சாபங்களிலிருந்தும் விடுதலை பெற்றார் .. 

பரமனைப் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களைப் பெற்றிடுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment