SWAMY SARANAM....GURUVE SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY FILLED WITH PEACE .. LOVE AND HAPPINESS .. MAY LORD SURYA'S BLESSINGS BE WITH YOU ALWAYS .. 
" JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானின் ஆதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

பொருள் - - - 
குதிரைகள் பூட்டிய தேரை உடையவனை அறிவோமாக .. கரங்களில் பாஸத்தை ( கயிறு ) வைத்திருப்பவன்மீது தியானம் செய்கிறோம் .. சூரியதேவனாகிய அவன் எம்மைக்காத்தருள்வானாக ! 

சூரியன் மெய்ப்பொருள் என்பது சௌரவ மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும் .. ஆதிசங்கரர் வகுத்தளித்த ஆறுவழிபாட்டு முறைகளில் சூரியவழிபாடு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது .. அதுமட்டுமின்றி நாம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரே தெய்வம் சூரியன் .. 

இத்தகைய சிறப்புகளைக்கொண்ட சூரியன் உலகம் முழுவதும் வியாபித்திருக்கின்றதால் மூலதத்துவத்தின்
பிரதிநிதியாக இருப்பதாலும் சூரியநாராயணன் என்றும் .. பகலில் உதிப்பதன் காரணமாக பகலவன் என்றும் .. கதிர்களைவீசி உயிர்களை இன்புறச்செய்வதால் கதிரவன் என்றும் போற்றப்படுகிறான் .. 

சூரியனுக்கு ஈர்ப்புசக்தி அதிகம் .. இந்த சூரிய சக்தியைத் தான் விஞ்ஞானிகள் உலகிற்குப் பயன்படும் சக்தியாக மாற்றி பலவெற்றிகளை அடைந்துள்ளனர் .. சூரியசக்தியிலிருந்து எரிசக்தி .. மின்சக்தி போன்றவற்றை இந்த பூவுலகம் பெற்று பயன்படுத்தி வருகிறது என்பது இன்றைய நடைமுறையில் நாம் காணும் நிகழ்வாகும் ..

தினமும் சூரியகாயத்ரியைப் பாராயணம் செய்து .. அனைத்து இன்னல்களும் நீங்கி .. அச்சம் அகன்று .. கண்களுக்கு புத்துயிர்பெற்று .. கல்வி .. வேள்விகளிலும் சிறந்து விளங்கி நலமுடன் வாழ்வீர்களாக .. 
“ ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment