SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 
" PANJAMI DAY " AND MAY GODDESS VARAHI PROTECT YOU FROM ALL ODDS AND GUIDES YOU ALONG THE RIGHT PATH .. 
MAY YOU BE RELIEVED FROM ALL EVIL FORCES TOO ..
" JAI MAA VARAHI " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று மாலை பஞ்சமித்திதியும் வருவதால் அன்னை வராஹியை வழிபடுவது சிறப்பைத் தரும் .. தங்களனைவரும் அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று வழக்குகளில் வெற்றியும் .. வாழ்வில் முன்னேற்றமும் காண்பீர்களாக .. 

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !! 

வராஹியை இரவுக்கடவுள் என்று கூறுவர் .. காரணம் இவள் லலிதையின் படைத்தலைவி .. எனவே இரவு முழுவதும் உறங்காமல் போர்புரிவதினால் அவள் பகல் பொழுதில் உறங்குவாள் .. எனவே அன்னையின் வழிபாடு சந்திவேளை பொழுதில் ஆரம்பித்து இரவு முழுவதும் தொடரும் .. 

தமிழர்களின் வழிபாடுகளில் முக்கியமானதும் .. முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை .. பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள் .. இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் .. அன்னைக்கு மூன்று கண்கள் உண்டு .. இது சிவனின் அம்சமாகும் .. 

பைரவ சுவாமியின் சக்தியாக இருப்பதால் வராஹி உபாசனை அல்லது வராஹி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கே பலவிதமான சிரமங்கள் உருவாகும் 
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால் இவள் சிவன் .. ஹரி 
சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் ..
எதையும் அடக்கவல்லவள் .. சப்தகன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள் .. மிருகபலமும் .. தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களைத்தாங்கிக் காப்பவள் .. பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவவளாகச் சொல்லப்படுகின்றாள் .. 

கூப்பிட்ட குரலுக்கு வருபவள் .. அன்னை வராஹியை வழிபட்டாள் வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம் .. எதிரிகளை அன்பால் வெல்லலாம் .. 

“ ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில் .. களிக்கும் இச்சிந்தையில் காரணமாம் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே ! “ ( திருமூலர் ) 

பொருள் - - 
உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால் உண்மைப் பொருள் விளங்கும் 
மனம் தெளிவுபெறும் .. அவளை அறிந்துகொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார் .. 

அன்னை வராஹியை வழிபடுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போமாக ! ஓம் வராஹி ! சிவசக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment