SWAMIYE SARANAM IYYAPPPA
GURUVE SARANAM SARANAM
PANVEL BALAGANE SARANAM IYYAPPA

 அனைவருக்கும் அன்பார்ந்த ஞாயிறு காலை வணக்கங்கள்..குருவே சரணம் சரணம்....

 ஒளிதரும் நாயகனே இருள்நீக்கும் அய்யனே
உள்ளே ஞானவொளிப் பெருகச் செய்பவனே
வெளியே அஞ்ஞான இருளை ஓட்டுபவனே
தள்ளியே நின்று தவறாமல் காப்பவனே!
மலைமேல் நின்று உயிர்காக்கும் பாலனே

நீ இல்லாவிடில் ஓய்ந்திடும் என் மூச்சே 

உலகம் உய்ய வேண்டுமுன் நீயே
கண்ணால் காணும் தெய்வமும் நீயே!
வம்புலி மேல் பவனி வந்திடும் பாலகனே

 பெருந்தீமை  குறைத்து அருளிடும் மித்திரனே
அனுதினம் அருள் வழங்கிடும் அய்யனே 

நோய்கள் நீக்கிக் நேராக்கும் பாலனே 

கண்களைச் சீராகக் காத்திடும் சீராளன் நீயே
 கரங்குவித்தே வேண்டுவோம் பன்வேல் பாலகனை

சுவாமி சரணம் ஐயப்பா சரணம்  எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
குருவின் திருவடி தொழுது 

தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

No comments:

Post a Comment