SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE ASHTAMI DAY TOO .. MAY LORD BHAIRAVA BLESS YOU AND REMOVE ALL THE OBSTACLES AND RELIEVE YOU FROM DEBTS AND PAVE AWAY FOR AN ABUNDANT INCOME .. 
" OM SHREE BHAIRAVAAYA NAMAHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று மாலையில் அருகிலிருக்கும் சிவாலயம் சென்று பைரவமூர்த்தியை நெய்தீபம் 
ஏற்றி வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் நல் ஆரோக்கியமும் .. இழந்த அனைத்து செல்வங்களை மீளப்பெறவும் .. கடன்சுமை குறைந்து வாழ்வில் சுபீட்சமும் .. வசந்தமும் மலர்ந்திடவும் பைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி .. முருகன் .. வீரபத்திரர் .. ஐயனார் .. மற்றும் பைரவரும் ஒருவர் .. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும் .. இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும் .. எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள்செய்வதால் இவருக்கு பைரவர் என்பது பெயராயிற்று .. 

பொதுவாக பைரவர் நீலநிறமேனி கொண்டவராய் .. சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய் .. பாம்புகள் பொருந்திய திருவரையும் .. மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும் .. சூலம் .. பாசம் .. உடுக்கை .. மழு .. முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் .. அஷ்டபைரவர் வடிவங்களாக கூறும்போது அவரின் வண்ணம் .. ஆயுதம் வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும் .. 

மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன் ஆதிகாலத்தில் சிவனாரைப்போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார் .. ஒருமுறை அவர் அகந்தையால் அறிவு மங்கிச் சிவநிந்தனை செய்தபோது சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்து பைரவரும் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்து கபாலமாக்கிக் கொண்டார் .. 

அடிமுடிதேடியபோது திருமுடிகண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவர்மூலம் கொய்ததாகவும் ஒரு புராணக்கதை உண்டு ..

காலத்தை நிர்ணயம் செய்யும் பைரவப்பெருமானை நாமும் துதித்து தீவினைகளிலிருந்து விடுபடுவோமாக ..
” ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment