சுவாமியே சரணம் ஐயப்பா. குருவே சரணம் சரணம்

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்கள் அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானை மற்றும் பன்வேல் பாலகனை  பிரார்த்திக்கின்றேன் .. குருவின் ஆசிகளை பிரார்த்திக்கிறேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

மலையேறி வந்து தன்னைத் தரிசிப்பவர்களுக்கு வாழ்வின் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே முருகப்பெருமான் ! 

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயருண்டு .. முருகப்பெருமான் மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார் .. இதுபோலியான உலக வாழ்வைக்குறிக்கிறது .. இவரே காலைவேளையில் ஆண்டிக்கோலத்தில் காட்சியளிப்பார் .. நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது .. 

இந்த ஞானத்தை உலகமக்களுக்கு வழங்கும் கனிபோன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது .. இதனால்தான் இங்குவந்த ஒளவையாரும் முருகனை “ பழம் நீ “ என்று அழைத்தார் .. இங்கு ஆண்டியாய் இருந்து கிடைத்ததை தனக்கென வைத்துக்கொள்ளாமல் அடியவர்களின் நலன்கருதி அவர்களுக்கே கொடுத்துவிடுகிறான் கந்தன் .. 

வேண்டுவனயாவும் வேண்டியபடி தந்தருளும் கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment