SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS . WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MAHAVISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH ... WEALTH ... AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAAYA " PANVEL BALAGAN PATHAM POTRI POTRI...GURUVE SARANAM SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் உகந்தநாளுமாகும் .. தங்களனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று நல்லாரோக்கியத்துடன் திகழ்ந்திட பன்வேல் பாலகனையும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

” மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி மேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விணகத்தில் மேவலும் ஆமே “ ( பெரியாழ்வார் ) 

பொருள் - 
எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமாத்திரை அளவு மூச்சுக்காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுதமொழியாகும் .. 

வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனைக் கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது .. என்று பல பெரியவர்கள் சத்தியவாக்காக சொல்வது இதனால்தான் ..

மிகவிசேஷமாக ஸ்ரீவைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம் .. ஞானம் .. சக்தி .. பலம் .. ஐஸ்வர்யம் .. வீரியம் .. தேஜஸ் .. ஆகிய ஆறுவகையான குணங்களை ஒன்றாகக் கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் .. 

இத்தைகைய பகவான் சத்யத்வம் .. ஞானத்வம் .. அநந்தத்வம் .. ஆனந்த்வம் .. அமலத்வம் என்ற உண்மை .. அறிவு .. எல்லை இல்லா நிலை .. இன்பம் .. தூய்மை .. ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது .. இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் சௌலப்யம் .. சௌசீல்யம் .. காருண்யம் ஆகியவைகளும் இங்கே சிந்திக்கத்தக்கதாகும் .. 

இவ்வளவு பெருமைவாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன்கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒருமார்க்கத்தை ஸ்ரீவைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது .. அந்த அமுதம் என்னவென்றால்
“ ஓம் நமோ நாராயணாய “ என்ற எட்டெழுத்து மந்திரமாகும் .. இந்த மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்கமுடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளான் ..

இதில் வரும் ‘ ஓம் ‘ என்ற பிரணவம் மூலமந்திரம் என்பது நாம் அறிவோம் .. 
வைஷ்ணவ சித்தாந்தபடி அ.. உ .. ம் .. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஒலியே ‘ ஓம் ‘ என்பதாகும் .. 
இதனுள் இருக்கின்ற அகரம் - இறைவனையும் ..
மகரம் - உயிரையும் .. 
உகரம் - படைத்தலையும் குறிப்பதாகும் .. 

உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை மந்திரத்தின் இறுதி பகுதியில் வரும் ‘ நம ‘ என்ற வார்த்தையாகும் .. 
நம என்ற வார்த்தையில் 
ந - என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது .. 
மீதமுள்ள மகாரம் - உயிரைக் குறிப்பதாக அறிந்தோம் .. 
அதாவது இதன் பொருள் நானும் எனக்குரியவன் அல்ல என்பதாகும் .. 

அப்படி என்றால் நான் யார்க்கு உரியவன் ..? சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை .. அவனுக்கே நான் தாசானுதாசன் .. இந்த மந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதைத்தான் சொல்லாமல் சொல்கிறது .. 

மேலும் இதில் உள்ள நார .. அயன .. ஆய .. என்ற வார்த்தைகளுக்குத் தனிதனி பொருள் உண்டு .. 
நார - என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கும் .. 
அயன - என்ற சொல் - உபாயம் .. பலன் .. ஆதாரம் என்ற பலபொருள்களை தருகிறது ..
இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளைக்காட்டுகிறது .. 
ஆய - என்ற பதம் பணி என்ற பொருளைக் கொண்டது .. 
அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் 

ஆக “ ஓம் நமோ நாராயணாய “ என்ற வார்த்தைகள் மனிதனின் ஆணவம் அழிகிறது .. ஆண்மை பிறக்கிறது .. ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது .. 

திருமாலைப் போற்றுவோம் ! அவர் திவ்யபாதக் கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment