SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PAST SINFUL REACTIONS .. CURSES .. DESTROYED ON THIS " YOGINI EKADASI DAY " AND BE BLESSED WITH HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இப்புண்ணிய நன்நாளில் ஏகாதசித் திதியும் வருவது அதிவிசேஷமே ! ஆலயம் சென்று பகவானை வழிபடுவது சாலச்சிறந்தது .. அறிந்தோ .. அறியாமலோ செய்த அனைத்து பாவங்களும் சாபங்களும் நீங்கி .. இழந்த அனைத்து செல்வங்களும் மீளப்பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு தங்களனைவருக்கும் மலர்ந்திட ஸ்ரீவிஷ்ணுபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஆனிமாத தேய்பிறை ஏகாதசியை “ யோகினி ஏகாதசி “ என்றழைப்பர் .. இதனை அனுஷ்டிப்பவர்கள் அவரவரது பாவத்தின் பிரதிபலன்கள் அழிந்து மேலான முக்தியை பெறுவர் .. இந்த உலகில் அழியும் பொருட்களின்மீது பற்றுக்கொண்டு மாயை என்னும் சமுத்திரத்தின் பாதாளத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை மீட்டு ஆன்மீகம் (பக்தி) என்னும் நாராயணன்பால் கொண்டு சேர்க்கும் நன்னாளே ஏகாதசி ! 

எடுத்தபணியை சிரத்தையுடனும் .. கவனத்துடனும் செய்யவேண்டும் .. பூஜைமுதலான தெய்வகாரியங்களில் சோம்பேறித்தனத்தையும் .. அக்கறையின்மையும் .. விட்டுவிட்டு மனதில் எப்பொழுதும் கட்டுப்பாடனும் சதாசர்வகாலமும் ஈஸ்வர சிந்தனையுடனும் இருக்கவேண்டும் .. ஏகாதசி விரதமஹாத்மியத்தைப் படிப்பதாலும் அல்லது கேட்பதாலும் பல புண்ணியபலன்களும் கிட்டும் .. 

கலியுகத்தில் கர்மவினையினால் ஏற்படும் வெண்குஷ்டம் போன்ற கொடிய ரோகங்களில் இருந்து விடுபட யோகினி ஏகாதசி அன்று பக்தி சிரத்தையுடன் பகவானின் நாமஸ்மரணையுடன் உபவாசமிருந்து விரதத்தை கடைபிடித்துவர அனைத்து நோய்களும் விலகும் .. 

பகவானைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதக்கமலங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment