PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD MURUGA .. MAY HE ELIMINATE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & BLESS YOU WITH WISDOM .. STRENGTH .. AND PROSPERITY .. 
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வ மங்களங்களையும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று கார்த்திகை விரதமும் அனுஷ்டிப்பதால் கலியுகவரதனாகிய கார்த்திகேயன
ைத் துதித்து தங்களனைவருக்கும் கல்விவேள்விகளில் சிறந்து விளங்கவும் .. செல்வம் .. நிம்மதியான ஆரோக்கிய வாழ்வு அமைந்திடவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

தடைகள் .. தோஷங்கள் .. கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன .. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும் .. உள்ளமும் தூய்மையாகி .. மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது .. அந்தவகையில் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது .. 

“ ஆறுமுக உருவாய்த் தோன்றி .. 
அருளோடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் 
வீற்றிருந்து அருளினானே “ 

என்று கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது .. வாரம் .. திதி
நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உண்டு .. 
வாரம் என்பது - வாரத்தின் நாட்களை குறிக்கும் இதில் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்தநாள் ..
திதிகளில் - சஷ்டி திதி முக்கியவிரதமாகும் ..
நட்சத்திரத்தில் - கார்த்திகை அல்லது கிருத்திகை முருகனின் நட்சத்திரமாகும் .. 

சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற .. அந்த குழந்தைகளை சீராட்டி .. பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது 
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்த ஆறுமுகனை வளர்த்தவர்கள் என்பதால் அவர்களை போற்றும் வகையிலேயே கிருத்திகை விரதநாளும் அனுஷ்டிக்கப்படுகிறது .. 

மாதாமாதம் வரும் கார்த்திகை .. மாதக்கார்த்திகை என்றும் .. கிருத்திகை விரதம் என்றும் அழைப்பர் .. மற்ற நட்சத்திரங்கள் ஒன்று .. இரண்டு .. மூன்று அல்லது நான்கு 
நட்சத்திரங்களுடைய கூட்டமாகும் .. ஆனால் கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் .. அவன் வம்சபரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து ..

இவ்வளவு பெருமைவாய்ந்த கிருத்திகை நட்சத்திர நாளில் கந்தனின் மஹிமையைப் போற்றும் திருக்கதைகளை படித்தோ .. கந்தர் அனுபூதி .. கந்தரலங்காரம் .. கந்தசஷ்டி கவசம் போன்ற பக்திபாமாலைகளை பாராயணம் செய்து நன்மைகளாயிரம் பெறுவோமாக .
“ ஓம் சரவணபவாய நமஹ ” வாழ்க வளமுடனும் 

 .. என்றும் நலமுடனும்

 

No comments:

Post a Comment