GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" MAHA PRADOSHAM DAY " AND MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & PAINS & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA "
JAI BHOLE NATH ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று திரயோதசித் திதியும் .. பிரதோஷமும் சேர்ந்துவருவதால் “ மஹாபிரதோஷம்” என்பர் .. ஆலகாலவிஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகைமாத சனிக்கிழமையாகிய திரயோதசித் திதியில் .. அதனால் எல்லா பிரதோஷங்களிலும் சனிப்பிரதோஷமே உயர்ந்தது
தங்களனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிகளின் ஆசீர்வாதங்களுடன் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழ்ந்திட எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக ..
மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம் இதனை சனிமஹாபிரதோஷங்களில் பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் பெருகும் ..
” பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரய காரணாயஹாலஸ்யமத்ய நிலயாய நமஸ்ஸிவாய ” ..
பொருள் -
பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே!
மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !
பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே !
பிரளயகால மேகம்போன்ற அருட்திரட்சி கொண்டவரே !
பிரதமகணங்களுக்கு ஈஸ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூடவிஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே !
ஹாலஸ்யஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !
சிவனுக்கு நடைபெறும் பூஜைகளில் சனிப்பிரதோஷ பூஜை
மிகவும் சிறந்தது ..
தோஷம் என்றால் - குற்றமுடையது என்று பொருள் ..
அதேநேரம் பிரதோஷம் என்றால் - குற்றமற்றது என்று பொருள்படும் ..
எனவே குற்றமற்ற இந்தபொழுதில் இறைவனை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும் ..
( மாலை 4.30 - 6.00 மணிவரை )
சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு ஊடாக தரிசனம் செய்து வழிபட்டு அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுபடுவோமாக .. “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும்
என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment