GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND STRENGTH .. " JAI SURYA DEV "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகன் சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் ..
மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாக திகழ்ந்திடவும் சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது .. இருளில் தவித்த மனிதன் தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான் .. தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான் ..
விநாயகர் .. முருகன் .. சிவன் .. சக்தி .. விஷ்ணு .. ஆகிய தெய்வவழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின .. சூரியவழிபாட்டுக்குரிய மதத்தை “ சௌரம்” என அழைத்தனர் .. இதனால் சூரியன் முதல்கடவுள் என்ற சிறப்புக்கு உரியவராகிரார் ..
சூரியவழிபாட்டுக்கு உகந்தநாள் ஞாயிறு .. நட்சத்திரங்களில் கார்த்திகை .. உத்திரம் .. உத்திராடம் .. சிறந்தவை .. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது .. இந்த நாட்களில் காலையில் நீராடியபின் கிழக்கு நோக்கிநின்று சூரியனை வணங்கவேண்டும் ..
நமஸவித்ரே ஜகதேச ச க்ஷ்ப்ஷே !
ஜகத் பீரஸுது ஸ்திதி நாச ஹேதவே !
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே !
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே !
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயாம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வபாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம் !!
என்ற சூரியமந்திரத்தைச் சொல்லவேண்டும் ..
பொருள் - -
உலகிற்கு கண்ணாக இருப்பவனே ! முத்தொழில்களான படைத்தல் .. காத்தல் .. அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே ! வேதவடிவமே ! முக்குணங்களைப் பெற்றவனே ! பிரம்மா .. விஷ்ணு .. சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே ! உமக்கு நமஸ்காரம் ! காஷ்யப முனிவரின் புதல்வனே ! செம்பருத்தி பேரொளி உடையவனே ! பாவங்களைப் போக்குபவனே ! திவாகரனே ! உம்மைப் போற்றுகிறேன் !!
இந்த மந்திரத்தை ஜெபித்து நீண்ட ஆயுளும் .. ஆரோக்கியமும் பெற்றிடுவோமாக !
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment