PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. MAY ALL YOUR WISHES COME TRUE .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மும்மூர்த்திகளுள் ஒருவர் மஹாவிஷ்ணு .. இவர் திருமால் .. பெருமாள் .. மாயன் .. நாராயணன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் .. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள் .. அதனால்தான் கடவுள் எங்கும் உள்ளார் என்று கூறுகின்றோம் .. 

பரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்திசெலுத்த பலவகைகள் உண்டு .. அவற்றுள் முக்கியமான வழி இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப்பாடுவது .. இதை “ திவ்யநாமசங்கீர்த்தனம் “ 
என்பர் .. கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி .. 

“ கெடும் இடரெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக்கில்லார் “ 
பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யமதூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர் .. இதனால் நமது துயர்கள் அனைத்தும் விலகும் .. என்கிறார் நம்மாழ்வார் 

பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் .. அறியாதவனாயினும் .. சுத்தனாயினும் .. அசுத்தனாயினும் .. யாராயினும் .. சத்திய ரூபத்தை அடைகிறான் .. பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது .. 

நாம சங்கீர்த்தனம் செய்பவன் பதிதைகளான பெண்டிர் . லோபிகள் .. பாஷாண்டிகள் நடுவில் இருந்தபோதிலும் சீக்கிரமே விடுதலையடைந்து விடுகிறார்கள் .. எல்லாவிதமான அசுத்தங்களையும் அகற்றி அபராதங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் .. அசுபங்களிலிருந்து மீட்டு சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம் மட்டுமே ! என்று பகவானின் நாம மஹிமைகளை பத்மபுராணம் நமக்குகூறுகிறது .. 

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு ! நாளும் நடப்பதெல்லாம் நாராயணன் விளையாட்டு ! 
பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவை
வணங்கித் .. துன்பமற்ற பெருவாழ்வு வாழ்வோமாக .. 
ஓம் நமோ நாராயணாய .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment