SWAMIYE SARANAM.........GURUVE SARANAM...TODAY SIXTHDAY VIRADHAM


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY AND A DIVINE ' SADURTHI ' TOO .. MAY LORD GANESH REMOVE ALL THE OBSTACLES AND PROTECT YOU FROM ALL EVIL FORCES AND BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து வருவது சிறப்பு .. சிறப்புமிக்க இந்நாளில் விக்னேஷ்வரனைத் துதித்து தடைகள் அனைத்தும் களைந்து தங்களனைவரும் வெற்றிபெற அருள்புரிவாராக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகர் பிரணவத்தின் வடிவம் .. இதன் திரிந்த வடிவமே
பிள்ளையார் சுழி .. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும் .. சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும் .. 

வளர்பிறை சதுர்த்தியாகிய இன்றைய சதுர்த்தி விரதம் “வரசதுர்த்தி” என்றும் .. “ சுக்லபட்ச சதுர்த்தி “ என்றும் அழைப்பர் .. இதன் வழிபாடுகளை மதிய நேரத்தில் செய்வது நல்லது .. எல்லா வரமும் தரும் சதுர்த்தி என்றழைப்பர் .. 

இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே !
பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே ! தேவர்களுக்கெல்லாம் தேவனே ! கருணைமிக்கவனே ! 
யானைமுகத்தோனே ! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே ! எல்லையில்லாத பரம்பொருளே!
விநாயகப்பெருமானே ! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன் ! நம்மனைவரையும் காத்தருள்வாயாக ! 

” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment