PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE POTRI POTRI...GURUVE SARNAM...SWAMIYE SARANAM IYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY JANMASHTAMI AND MAY LORD KRISHNA BRING HAPPINESS AND PROSPEROUS IN YOUR LIFE AND MAY HATRED LEAVE AWAY FROM YOU .. ENJOY THE AUSPICIOUS DAY WITH LOTS OF LOVE & HAPPINESS .. " JAI SHREE KRISHNA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. இன்றையநாளில் ஸ்ரீகிருஷ்ணபகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற்று வாழ்வில் வசந்தம் மலர்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தாமோதராய வித்மஹே ! 
ருக்மணி வல்லபாய தீமஹி ! 
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! 

கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆண்டுதோறும் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிறது .. பகவான் மஹாவிஷ்ணு பூமிபாரம் குறைப்பதற்காகவும் .. நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணிமாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமித் திதியில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தநாளே கோகுலாஷ்டமி என்ற இன்றைய நாளாகும் .. 

இறைநிலை எளிதாக எட்டக்கூடியது .. பிறவிப்பயன் தெரியாமல் இறைநிலைமை உணரமுடியாமல் உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணங்கள் கிருஷ்ணரைப் பின்பற்றினால் மாறும் .. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தவர் .. மகிழ்ச்சி வெளியில் இல்லை .. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர் .. 

அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் .. இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது .. அஷ்டமி .. நவமி திதிகளில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள் .. காரணம் இந்த திதிகளில் தான் கிருஷ்ணரும் (அஷ்டமி) இராமரும் 
(நவமி) பிறந்து அதிக கஷ்டங்களை சந்தித்து விட்டார்கள் 
என்ற காரணம் சொல்லப்படுகிறது .. அதனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவரும் பிறகு சாதனையும் .. சக்தியும் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள் .. 

கிருஷ்ணபரமாத்மா தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர் .. அதனால்தான் இவரை 
“ கண்ணா “ என்கிறோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவர் .. 
முகுந்தா - ‘ மு ‘ என்றால் - முக்தியை அருள்வது என்று பொருள் ..
“ கு “ என்றால் - இவ்வுலக இன்பங்களை அருள்வது .. இவ்வுலகில் வாழ்வதற்கும் .. முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில் தான் “ முகுந்தா “ என்று அழைக்கிறோம் .. 

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் வரைகிறோம் ..? 
நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வொரு கிருஷ்ணபக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார் .. இப்படி ஒரேநேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா .. 

நான் எங்கும் இருப்பேன் ! எத்தனைகோடி பக்தர்களையும்
பார்ப்பேன் ! காப்பேன்! என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக்கோலம் போடுகிறார்கள் .. 

” நீ எனக்கு ஒரு இலையைக்கொடு .. அல்லது பூவைக்கொடு .. அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு .. எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடு .. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் “ என்றார் கீதையில் கண்ணன் .. 

பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார் .. 

“ ஜெய்கிருஷ்ணா முகுந்தா முராரே “ எனப் பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றிகாண்போம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment