PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU HIS ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES .. " OM MURUGA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று கார்த்திகை நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பு .. தங்களனைவரும் வேலவனருளால்
நல்வாழ்வு .. ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் யாவும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப்பொய்கையில் ஆறுபகுதிகளாக விழுந்தது .. இது
ஆறுகுழந்தைகளாக உருப்பெற்றது .. கர்த்திகைப் பெண்கள் அறுவர் இந்த ஆறுகுழந்தைகளை வளர்த்தனர் 
ஒருகார்த்திகை திருநாளில் அன்னை பார்வதிதேவி இந்த ஆறுகுழந்தைகளையும் இணைத்தார் .. ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றழைக்கப்படுகிறார் ..

சிவனைப்போலவே முகத்திற்கு மூன்றுகண்கள் என ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களையும் உடையவர் .. 

” அருவமும் .. உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே ஒருதிருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய “ .. ( கந்தபுராணம் )

உயிர்களுக்கு வேண்டுவது மூன்றுசுகம் .. இகம் .. பரம் .. வீடுபேறு .. இந்த மூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகன் .. அதனால் அப்பெருமான் மூன்று உகரங்களுடன் கூடிய முருகு என்ற சொல்லை உடைய தனிப்பெருந்தெய்வமாக விளங்குகின்றான் .. இந்த மூன்று நலன்களை வழங்க வல்ல தெய்வம் முருகவேள் ! 

இகநலனை - வள்ளிதேவியைக்கொண்டும் ..
பரநலனை - தெய்வயானை அம்மையைக்கொண்டும் ..
முக்திநலனை - வேலாயுதத்தைக் கொண்டும் .. 
நமக்கு அருள்புரிகின்றான் முருகன் .. 

எனவே முருகப்பெருமானை பயன்கருதாது மெய்யன்புடன் வழிபடுவோர் இகம் .. பரம் .. வீடு என்ற மும்நலன்களையும் பெற்று செம்மையுறுவார்கள் ..

அழகுக்கடவுளாக உறையும் முருகனை தமிழ்க்கடவுளாக
நாம்கொண்டோம் .. முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன் என்பர் .. அத்தகைய பெருமையும் அருளும் நிறந்த முருகப்பெருமானை கார்த்திகை நன்னாளாகிய இன்று போற்றி வணங்குவோம்
வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment