PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GARUDA BHAGAVAN .. MAY HE RELIEVE YOU FROM ALL EVIL FORCES AND SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " JAI SHREE GARUDA DEV "

 







 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கருடாழ்வார் பிறந்த ஆடிமாதம் சுவாதி நட்சத்திரமாகிய இன்று .. ராகு .. கேது போன்ற சர்ப்பதோஷங்கள் நீங்கி .. தங்களனைவரது வாழ்விலும் மங்களத்தைத் தந்தருளுமாறு கருடபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
ஸுவர்ணபக்ஷாய தீமஹி ! 
தந்நோ கருடஹ் ப்ரசோதயாத் !! 

பெரியதிருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான் .. இந்தத் திருநாளில் கருடதரிசனம் செய்வதாலும் .. கருடனை வழிபடுவதாலும் .. சகலதோஷங்களும் நீங்கும் .. மாங்கல்யம் பலம்பெறும் .. 

கருடாழ்வாரை பெரியதிருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறியதிருவடி என்றும் சொல்வார்கள் .. எந்தநேரமும் எல்லாவிதங்களிலும் திருமாலுக்கு திருப்பணிகள் செய்யும் நித்தியசூரிகளில் கருடனும் .. ஆதிசேஷனும் பிரதானமானவர்கள் ..

இந்திரனே ! வல்கிய முனிவரின் சாபத்தால் கருடனாக பிறந்ததாக புராணம் கூறுகிறது .. ஆடி சுவாதி நாள் அன்று 
அவதரித்த கருடனுக்கு பல்வேறு கோவில்களில் சாயா பரிவட்டம் கட்டுவார்கள் .. அதாவது பாம்பு .. தேள் .. பூரான்
வரையப்பட்ட நீண்ட வஸ்திரமாகும் .. பெருமாள் கோவில்
மூலவருக்கு நேர் எதிராக கைக்கூப்பிய நிலையில் எழுந்தருளி இருப்பவர் கருடாழ்வார் .. பெருமாளின் வாகனமான இவர் வைகுண்டத்திலிருந்து திருமலையான சப்தகிரியை ( திருப்பதி ) பூலோகத்திற்கு கொண்டுவந்தவராம் .. 

இதன்காரணமாக சப்தகிரி என்றும் .. ஏழுமலைகளில் ஒருமலைக்கு கருடனின் பெயரில் “ கருடாத்ரி “ என்று பெயரிடப்பட்டுள்ளது .. கருடன் பெருமானின் வாகனம் .. ஆனால் .. அந்த கருடனுக்கும் வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில் “ சுபர்ணோ வாயுவாஹன “
என்று குறிப்பிட்டுள்ளார் .. அதாவது காற்றே அவரது வாகனம் .. 

உடல் முழுவதும் அஷ்டநாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார் .. ஒருகாலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்தநிலையில் இருகரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார் .. இருபுறமும் பெரிய இறக்கைகள் இருக்கும் .. பெருமாள் கோவில்களில் கொடிமரமானது 
“ துவஜஸ்தம்பம் “ என்றும் “ கருடஸ்தம்பம் “ என்றும் அழைக்கப்படுகிறது .. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது “ வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் “ என்று வரமளித்தார் .. 

கருடதரிசனம் சுபசகுனமாகும் .. கருடன் மங்களவடிவினன் .. வானத்தில் கருடன் வட்டமிடுவதும் 
கத்துவதும் .. நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது 
கோவில் கும்பாபிஷேகம் .. யாகம் .. சிறப்புவழிபாடுகள் நடக்கும்போது .. கோவிலுக்கு நேர்மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம் .. 

ராமாயணத்தில் ராமபிரானின் தூதனாக இலங்கைக்கு சென்று சீதாபிராட்டியை சந்தித்தவர் அனுமன் .. அதேபோல கிருஷ்ண அவதாரத்தில் தாயார் ருக்மணிகொடுத்த ஓலையை ஸ்ரீகிருஷ்ணரிடம் கொடுக்க தூதுசென்றவர் கருடன் .. அனுமனும் கருடனும் பகவானின் தூதர்கள் .. இவர்களிடம் மனமுருகவேண்டினால் நமது பிரார்த்தனைகள் .. வேண்டுதல்களை பகவானிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்பது ஐதீகம் .. 

கருடபகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் கருடபகவானே ! நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment