PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARNAM SARANAM...PANVEL BALGANE SARANAM IYYAPPA...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS DURGA .. MAY HER BLESSINGS REMOVE ALL THE OBSTACLES AND EVIL FORCES FROM YOUR LIFE AS SHE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE TOO .. " OM SHAKTHI " JAI MATA DI ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நான்காம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னை துர்க்கையம்மனைப் பிரார்த்தித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் .. அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வாழ்வில் வசந்தம் மலர்ந்திடவும் அன்னையைப் போற்றுகின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

“ ஆடி “ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர் .. பிரம்மதேவனை வேண்டி பலவரங்கள் பெற்ற இவன் .. நினைத்தமாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன் .. 

ஒருமுறை பரமேஸ்வரனையே ஏமாற்றவிரும்பி உமாதேவியின் உருவமாக உருமாறி ஈசனை அனுகினான்
இதனை அறிந்த சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை அழித்தார் .. 

சிவனையடையும் பக்திஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன்நினைவாக மாதங்களில் ஒன்றை ” ஆடி “ என்று அழைத்தாள் .. அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாகவே அமைந்தது .. 

ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும் .. கூழ் ஊற்றுவதும் வழக்கம் ,, இது ஏன் என்று தெரியுமா ..? 
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்தவீரியார் சுனனின் மகன்கள்
கொன்றுவிடுகின்றனர் .. இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயைமூட்டி 
அதில் இறங்குகிறார் .. அப்போது இந்திரன் மழையாகமாறி
தீயை அணைத்தார் .. தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது .. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார் .. 

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராமமக்களிடம் சென்று உணவு கேட்டார் ..அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி .. வெல்லம் .. இளநீரை கொடுத்தனர் .. இதைக்கொண்டு கூழ்தயாரித்து அருந்தினார் .. அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவியிடம் உலகமக்களின் அம்மை நோய்நீங்க நீ
அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும் ! நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும் ! இளநீர் சிறந்த நீராகாரமாகும் ! என்று வரம் அளித்தார் .. இச்சம்பவத்தை நினைவு கூறும்வகையில் ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது

பக்திகமழும் ஆடிமாதத்தில் கருணாரூபிணியாகிய அன்னையைப் போற்றுவோம் ! அவள் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment