PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND MAY LORD SHIVA REMOVE ALL THE NEGATIVE FORCES AND BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று ஈசனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சிகரமான நல்வாழ்வும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சிவனின் ஜடாமுடியில் கங்கை வந்தமர்ந்த புராணக்கதை 
சகரமன்னன் அஸ்வமேத யாகம் நடத்தி இந்திரபதவியை அடையவேண்டும் என எண்ணியதால் அதற்கு தேவையானவைகளை தயார் செய்தான் .. அஸ்வமேத யாகம் நடத்தி யாகத்தின் முடிவில் பட்டத்து குதிரையை அவிழ்த்துவிடுவார்கள் ( அஸ்வம் - குதிரை ) அது எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாட்டின் மன்னன் நாட்டை
ஒப்படைக்கவேண்டும் .. அல்லது குதிரையை சிறைபிடித்து போர்புரியவேண்டும் .. 

இவ்வாறு 100 அஸ்வமேத யாகங்கள் முடித்தால் ‘இந்திரபதவி ‘ கிட்டும் சகரமன்னன் 99 யாகங்களை முடித்தான் .. 100வது யாகம் நடந்தால் பதவிபறிபோகும் என்ற பயத்தில் இந்திரன் சூழ்ச்சி செய்தான் .. 100வது யாகம் நடந்துகொண்டிருக்கையில் கட்டிவைத்திருந்த பட்டத்து குதிரையை அவிழ்த்து கொண்டு சென்று கபிலமுனிவரின் ஆசிரமத்தில் தவம் செய்துகொண்டிருந்த
கபிலரின் பின்னால் கட்டிவிட்டு மறைந்து விட்டான் இந்திரன் .. 

யாகம்முடியும் நேரத்தில் குதிரையை காணவில்லை ..
சகரமன்னனின் மகன்கள் மிகபலசாலிகள் அவர்களை அனுப்பி குதிரையை மீட்டு வருமாறு மன்னன் கட்டளையிட்டான் .. அவர்களும் குதிரையை தேடிசெல்கிறார்கள் .. கபிலரின் ஆசிரமத்தில் குதிரையைக்கண்டு தவத்தில் இருக்கும் கபிலரிடம் குதிரையை கொண்டுவந்து மன்னரிடம் கொடுத்து காலில்
விழுந்து மன்னிப்பு கேள் அல்லது இப்போது எங்களுடன் போரிடு என்றனர் .. 

கபிலர் தன்தவத்திலிருந்து அசையக்கூட இல்லை கோபமடைந்த சகர குமாரர்கள் கபிலரின் தொடையில் கத்தியால் கீறினார் .. அதற்கும் அசரவில்லை கபிலரை தூக்கி நிலத்தில் அடித்தனர் .. அவர்தவம் கலைந்தது .. 

கோபத்தில் கபிலர் பார்த்தவுடன் சகர குமாரர்கள் எரிந்து சாம்பலாகினர் .. இதனை கேள்விப்பட்ட சகரமன்னனும் தன் மகன்களை இழந்த துக்கத்தில் யாகத்தீயில் குதித்து தன் உயிரை போக்கிக்கொண்டான் .. 

சிலகாலம் கழித்து சகரவம்சத்தில் பகீரதன் என்ற மன்னன் பிறந்தான் .. அவன்நாடு வறுமைக்குள்ளானது அப்போது நாரதர் அவரிடம் வந்து நடந்ததை கூறி துயருக்கு காரணம் சாந்தி அடையாத அவனின் முன்னோர்களின் ஆன்மா தான் என்பதை விளக்கி பகீரதனை கங்கை சத்தியாலோகத்தில் இருக்கிறாள் அவளுக்குள் உள்ள முன்னோர்களின் சாம்பல் கரைந்தால் மட்டுமே உனக்கு பித்ருதோஷம் நீங்கி அவர்களுக்கும் முக்தி கிட்டும் என்றும் கங்காதேவியை எண்ணி தவமிருக்க சொன்னார் 

பகீரதனும் தன் முன்னோர்கள் சாந்தியடையவும் .. நாட்டு மக்களது நன்மைக்காகவும் தவமிருந்து கங்கையை பூமியில் பிரவேசிக்கும்படி வேண்டினான் .. ஆனால் கங்கை மறுத்தாள் .. அவளின் வேகம் மொத்த உலகத்தையும் அழிக்கும் சக்தியுடையது என்றும் ஈசனிடம் இதற்கு உபாயம் கேட்ககூறி மறைந்தாள் .. 

பகீரதன் ஈசனைநோக்கி தவமிருக்க ஈசனும் காட்சியளித்து ஒரு உபாயம் கூறினார் ..கங்கையின் வேகத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் தனக்கு மட்டும் உள்ளதாகவும் தன் ஜடாமுடியின் வழியில் கங்கா இறங்கினால் அவளின் வேகம் கட்டுக்குள் வரும் என்றார் 
பகீரதனும் கங்கையிடம் கூற “ ஈசன்முடி தொடுவது எனக்கு கிடைத்த பெரும்பாக்கியம் “ என்று கூறி உலகில் பிரவேசிக்க ஒப்புக்கொண்டாள் .. 

சிவபெருமான் இமயத்தின் உச்சியில் நின்று தன் ஜடாமுடியை அவிழ்க்க அதில் கங்காதேவி பிரவேசித்து தன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு பூமியில் பாய்ந்தாள் ..
நிலங்களை வளமாக்கி பகிரதனின் முன்னோர்களின் முக்திக்கும் வழிசெய்தாள் .. 

கங்கை புனிதமான நதி என்பதால் அதை தவவலிமையால் உலகிற்கு கொண்டுவந்த பகீரதன் பெயரையே கங்கை முதலில் பிரவேசித்த இடத்திற்கு சூட்டினார் சிவன் .. கங்கையின் புனிதம் மாறாமல் இருந்து உலகமக்களின் நன்மை தொடர கங்கை எப்பொழுதும் தன் தலையில் இருப்பதே நல்லது என்று ஏற்றார் .. அன்றிலிருந்து கங்காதரனாக காட்சியளிக்கிறார் சிவன் .. 
கங்கையில் குளித்தால் பாவம்போக்கி புண்ணியம் தரும் 

சிவனைப் போற்றுவோம் ! அனைத்து நன்மைகளையும்
பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment