PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY AND A DIVINE SIVARATRI TOO .. MAY ALMIGHTY LORD SHIVA BLESS YOU & SHOWER YOU WITH GOOD HEALTH .. STRENGTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று மாதசிவராத்திரியும் .. மாலையில் சதுர்த்தசித் திதியும் கூடிவருவதால் எல்லாம் வல்ல சிவபெருமானை வழிபடுவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் சுபீட்சமிக்க நன்னாளாக அமைந்திடவும் .. நல்லாரோக்கியமும் .. வாழ்வில் நிம்மதியும் பெற்றிடவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதமே ! 
” எட்டுணையும் உளத்து .. அன்பிலரேனும் .. உளரேனும் .. இந்நாள் எம்மைக்கண்டவர் .. நோற்றவர் .. பூசிபண்ணினர்
நற்கதி அடைவர் .. “ 

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும்சரி .. அன்பு உள்ளவர்கள் ஆனாலும்சரி .. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர் .. விரதம் இருந்தவர் .. பூஜைசெய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருளாகும் .. என்று சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரதபண்டிதம் தெரிவிக்கிறது .. 

யுகம்யுகமாக கண்துஞ்சாமல் நம்மைக்காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக ஒரே ஒருநாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணியராத்திரியே அது ! 
ராத்ர என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்றுபொருள் .. எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது ராத்திரி எனும் பெயர்பெற்றது .. 

ஒருமுறை உலகமே இருண்டுகிடந்த மஹாசங்கார 
(சம்ஹார) காலமாகிய ஊழிக்காலத்தில் .. பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும் .. எங்கும் இருள்சூழ உலகம் செயலற்று எங்கும் அமைதிநிலவும் இந்நிலையில் சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார் .. அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி உலக உயிர்களை மீண்டெழச்செய்திட இரவு முழுவதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப்பெற்றாள் .. அதோடு தான் சிவவழிபாடு செய்ததை நினைவுகூறும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்குகால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள் .. ஈசன் அவ்வாறே வரம் அளித்தார் .. எனவே சிவனின் பெயரிலேயே சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது .. 

ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதிரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்யரூபத்தை அடைந்த புண்ணியதினம்தான் சிவராத்திரி ..

சிவனைப் போற்றுவோம் ! எல்லா ஞானமும் .. சித்திகளையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment