swamiye saranam iyyappa guruve saanam saranamGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE " INDIRA EKADASHI " TOO INDIRA EKADASHI MEANT TOGET RID OF ONES SINS AND IT ALSO GIVES SALVATION AND PEACE TO THE SOULS OF OUR DEPARTED ANCESTORS .. SO PLEASE DO OFFER SOME FOOD TO THE POOR .. " OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
திங்கட்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த விரத
மாகிய ஏகாதசியும் அனுஷ்டிக்கப்படுகிறது ..
தங்களனைவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்று அமைதியான வாழ்வும் அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசியை பித்ருக்களின் சாபத்தை நீக்கும் 
“ இந்திரா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இந்நாளில் விரத விதிமுறைப்படி உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிப்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதுடன் பாவவினைகளின் காரணமாக துரதிர்ஷ்டவசமாக நரகத்தில் தள்ளப்பட்ட அவரின் மூதாதையர்களும் விடுதலை பெறுவர் .. 

தத்துவரீதியாக இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் தனது ஆத்மவிடுதலைக்காக மஹாவிஷ்ணுவின் நாமசங்கீர்த்தனை செய்யவேண்டும் 
பாவகர்மங்களின் வினையினால் நரகத்தில் இருப்பவர் பகவானை அமைதியாக இருந்து தியானித்து பிரார்த்திக்க இயலாது .. 

நரகத்தின் தண்டனைகளின் விளைவுகளால் மனம் மிகவும் அலைகழிக்கப்படுவதால் அமைதி பெறுவது கடமையாகிறது .. ஆதலால் நரகத்தில் வசிப்பவரின் உறவினர் எவராவது அவரின் பெயரில் தான .. தருமம் செய்தால் அவர் நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கத்துக்குச் செல்வார் என்கிறது
பிரம்ம வைவர்த்த புராணம் .. 

இதைக்கேட்பவரும் .. படிப்பவரும் நிச்சயம் இவ்வுலக வாழ்க்கையில் அனைத்து சுகபோகமும் பெற்று வாழ்வதுடன் தன்பாவவினைகளிலிருந்து முக்தி பெற்று வாழ்வதுடன் .. இறுதியில் வைகுண்டத்தை அடைவர் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார் .. 

” ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment