புண்பட்ட மனதை 
பண்பட்ட அருள் பார்வை கொண்டு 
பூவாக மாற்றினாயே 
மேலான குரு நீயே !!

மலையெனத் துன்பங்களால்
சிலையென ஆனேன்
கலைந்தோடச் செய்தாயே நீயே
மேலான குரு நீயே!!

நிலையில்லா வாழ்வில் 
நிலையான செல்வம்
நீயே
விலை கொண்டு அளப்பரோ
மேலான குரு நீயே!!

தாய்க்கு மேலான தயவான குருவே
நோய்க்கு நீ ஆனாய் மருந்து
காக்கும் கருணையே சுவாமி
மேலான குரு நீயே சுவாமி!!

No comments:

Post a Comment