SWAMIYE SARANAM IYYAPPA,....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF BHAGAVAN BRIHASPATI .. MAY THE GOD OF WISDOM DEFEATS THE ENEMY AND RELIEVE YOU FROM ALL AILMENTS AND SHOWER YOU WITH SUCCESS AND HAPPINESS .. " JAI GURU DEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளிலே அமாவாசைத் திதியும் கூடிவருவது சிறப்பு .. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து தானம் அளிப்பதால் பித்ருதோஷங்களும் .. கிரகதோஷங்களும் நீங்கி தங்களனைவரது வாழ்விலும் வளம் செழிக்கும் .. 

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸஹித !
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

ஆங்கிலத்தில் ஜுபிடர் என்று அறியப்படும் கிரகத்தை நாம் குரு என்கிறோம் .. தேவர்களின் ஆச்சர்யனாக ப்ரஹஸ்பதி விளங்குவதால் குரு என அறியப்படுகிறார் 
” பொன்னன் “ என்றும் “ வியாழன் “ என்ற பெயர்களாலும்
அழைக்கப்படுகிறார் .. 

சிலர் குருபகவானும் தக்ஷிணாமூர்த்தியும் ஒன்று என்று நினைத்துக்கொள்கின்றனர் .. 
தக்ஷிணாமூர்த்தி - சிவபெருமானின் ஒரு ரூபம் .. 
தேவர்களின் குருவாகிய பிரஹஸ்பதி - சிவபெருமானை வழிபட்டு அவரால் “ குரு “ என்று அழைக்கப்பட்டு நவகிரகங்களில் ஒன்றானவர் .. 

நாட்டை ஆளவைப்பதும் .. நவீனயுக்திகளை கொடுப்பதும் இவர்தான் .. மென்மைக்கும் அற்புதமான குணத்திற்கும் சொந்தக்காரர் .. விவேகத்தை அளிப்பவர் .. மந்தகாச முகத்தினை உடையவர் .. இனிப்பில் பிரியர் .. மஞ்சள் நிறத்தவர் .. உடலில் சதையாக இருப்பவர் .. வாதம் .. பித்தம் .. கபம் .. இவற்றில் கபம் இவருடைய கையில் உள்ளது .. பஞ்சபூதங்களில் இவர் ஆகாயம் .. 

“ குணமிகு வியாழகுருபகவானே ! மணமுளவாழ்வை
மகிழ்வுடன் அருள்வாய் ! பிரஹஸ்பதி பரகுருநேசா !
கிரகதோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாயாக “ .. 

ஓம் குருவே ! போற்றி ! போற்றி ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment