SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS .. & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " JAI MATA DI " .

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்கள் இல்லங்களில் லக்ஷ்மிகடாக்ஷ்ம் என்றும் தழைத்தோங்க அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

” லக்ஷ்மிகடாக்ஷ்ம் “ என்னும் சொல் ஏதோ செல்வச்செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. சகலசௌபாக்கியங்களையும் குறிப்பது - வெற்றி .. வித்தை .. ஆயுள் .. சந்தானம் .. தனம் 
தான்யம் .. ஆரோக்கியம் .. இப்படி அனைத்தும் ஒருங்கே அமைவது தான் ” லக்ஷ்மிகடாக்ஷ்ம் “ .. 

அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒருசிறிய பங்கையேனும் தானதருமங்களை செய்துவரவேண்டும் .. 
அப்போதுதான் இருக்கும் செல்வம் விருத்தியடையும் .. எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவரமுடியாது .. 

நாம் வறியவர்களுக்கு தர்மம் செய்யாது .. சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவரது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும் .. இதைத்தான் 
“ ஈயார் தேட்டை தீயோர் கொள்வர் “ என்று அன்னை ஒளவையும் கூறியுள்ளார் .. 

” மந்திரம் உரைத்தாற்போதும் .. மலரடி தொழுதால் போதும் .. மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும் .. இந்திரப்பதவி கூடும் .. இகத்திலும் பரங்கொண்டோடும் இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும் .. “

ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment