அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும்
“ இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகளும் ” உரித்தாகுக .. தங்களனைவருக்கும் அறிவு .. தெளிந்த ஞானம் .. முதலியவற்றை அளித்து .. எடுத்தசெயல்கள் அனைத்தும் தடைவராவண்ணம் காத்தருள கணபதியை வேண்டுகிறேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் அவதரித்த நாளான ஆவணிமாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதியையே விநாயக சதுர்த்தி என ஆனைமுகப்பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளாக ஆண்டுதோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று கோலாகலமாக நாடெங்கும் .. இல்லந்தோறும் இனிய பூஜையாகக் கொண்டாடப்படுகிறது ..
நாம் எந்த ஒருசெயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும்
விக்கினங்களைத் தீர்த்து அருள்பாலிப்பவராகிய விநாயகர் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம் ..
அதேபோல் நாம் ஒரு கடிதத்தையோ .. கட்டுரையையோ
எழுதத்தொடங்கும் போது முதலில் பிள்ளையார்சுழியைப்போட்டு எழுதத் தொடங்குகிறோம்
பிள்ளையார்சுழி என்பது ..
அகரம் (அ)
உகரம் (உ)
மகரம் (ம)
ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள “ ஓம் “ என்னும் பிரணவமந்திரத்தின் ஆரம்பவடிவம் .. அதில் உள்ள
வட்டவடிவம் - சிவசக்திபீடம் ..
கோடு - சிவலிங்கத்தைக் குறிக்கிறது ..
நம் அனைவருக்குள்ளும் ஆத்மஸ்வரூபமாகிய விநாயகரே ! உறைகிறார் .. ஆகவே அவரைப் பூஜிப்பது நம்முடைய ஆத்மாவுக்கு நாமே நிகழ்த்திக் கொள்ளும் பூஜையாகும் .. இறைவழிபாடுகளில் மிகவும் இயல்பானதும் .. இலகுவானதும் விநாயக வழிபாடேயாகும் .. ஓம்காரம் எனும் பிரணவமந்திரத்தின் சாரமாகவும் .. சாயலாகவும் விநாயகருடைய உருவம் போற்றப்படுகிறது .. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது ஓம்கார ஒலி என்றால் அந்த ஓம்காரமாய்த் திகழ்வது ஓம்காரநாயகர் விநாயகரே !
விநாயகரைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி பெறுவோமாக !
“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லௌம் கம் கணபதயே ! வரத சர்வஜனமேய வஸமாயை ஸ்வாஹா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment