அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆவணிமாத வளர்பிறைப் பஞ்சமித்திதியாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நன்னாளாகும் .. அன்னையைத் துதித்து அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று
தங்கள் வாழ்வு வளம்பெற வேண்டுகின்றேன் ..
ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
ஆவணிமாத வளர்பிறை பஞ்சமியை
“ மஹாலக்ஷ்மி பஞ்சமி “ என அழைப்பார்க்ள் .. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் குணவதி .. பக்தர்களின் மனக்குறைகளை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாக விளங்குபவளும் அன்னை மஹாலக்ஷ்மியே ! யாகசாலைகளிலும் எந்த ஆலய குடமுழுக்கு விழாவின்போதும் வீட்டின் சகலபூஜைகளிலும் லக்ஷ்மி வழிபாட்டிற்கென ஓர் தனி இடம் உண்டு ..
எட்டு செல்வக்கருவூலங்களுக்கும் தலைமைத் தெய்வமாகத் திகழ்பவள் அன்னை மஹாலக்ஷ்மியே !
இதனை மார்க்கண்டேய புராணம் தெளிவுற விளக்குகிறது
லக்ஷ்மிகள் எட்டு .. அதனையே “ அஷ்டலக்ஷ்மிகள் “ என்று அழைக்கின்றோம் ..
செல்வம் .. ஞானம் .. உணவு .. மனவுறுதி .. புகழ் .. வீரம் .. நல்லபுதல்வர்கள் .. விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் இவையே அந்த அஷ்ட ஐஸ்வர்யங்களாகும் ..
இந்த அஷ்ட ஐஸ்வர்யங்களையும் .. ஒருவனால் பெறமுடியும் அதற்கு அந்தத் திருமகளின் அருட்கடாக்ஷ்மும் இருக்கவேண்டும் .. அன்னை மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே இதற்கு போதுமானது ..
சந்தனம் .. பன்னீர் -
மங்கள நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகைதரும் அனைவரையும் பன்னீர்தெளித்து சந்தனத் திலகமிட்டு மலர்களை மனதார கொடுத்து முகத்தில் புன்னகைததும்ப வரவேற்கவேண்டும் ..
சந்தனம் - திருமகளோடு அவதரித்த ஐந்து மரங்களில் ஒன்றாகும் ..
அன்னையை யானை துதிக்கையால் நீராட்டுவதை
பன்னீர் தெளிக்கும் நியதி குறிக்கிறது .. இதனால் லக்ஷ்மிதேவி அந்த சுபகைங்கரியத்தை வாழ்த்துவதாக ஐதீகம் ..
பூஜைக்கு தகுந்த மஹாபாக்கியம் உள்ளவர்களாகவும் .. தூய்மை உள்ளவர்களாகவும் .. விளங்குபவர்கள் நம் இல்லப்பெண்மணிகள்தான் .. கிரகலக்ஷ்மியாகத் திகழ்பவர்கள் .. ஆகவே இல்லப் பெண்மணிகளை தீயச்சொல்கூறி திட்டுவதோ .. அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது .. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்தரமாக குடிகொண்டு வசிப்பாள் .. தினமும் காலை .. மாலை இருவேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் .. இல்லங்களில் செல்வம் பெருகும் ..
குங்குமம் -
குங்குமம் லக்ஷ்மிகடாக்ஷ்மிக்கது .. பெண்கள் குங்குமம் இடுவதால் மஹாலக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள் .. குங்குமத்தை மோதிரவிரலால் தான் இடவேண்டும் .. சிவப்புநிறகுங்குமமே புனிதமானது .. பிறவண்ணங்களில் குங்குமம் இடலாகாது .. மாங்கல்யம்
நெற்றி .. தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீலக்ஷ்மிதேவி உறைகின்றாள் ..
கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது .. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிரவிரலை வளைத்து குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம் ..
அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும்
பெற்றிடுவோமாக !ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே!
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment