PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD MURUGA MAY HE RELIEVE YOU FROM ALL EVIL FORCES AND PROTECT YOU AND GUIDE YOU AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் கந்தனைத் துதித்து .. எந்தவினையானாலும் ..
கந்தன் அருள் இருப்பின் .. அனைத்தும் களைந்தோடிட அருள்புரிவாராக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகன் அருள்வேண்டி பக்தர்கள் அனுஷ்டிக்கும் விரதங்களுள் தலமையானதும் .. ஒப்பற்றதும் 
“ சஷ்டி விரதமே “ ! சஷ்டி விரதமிருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடிகொள்வான் என்ற பொருளும் உண்டு .. இதனைச் சுப்ரமண்ய சஷ்டி விரதம் என்றும் அழைப்பார்கள் .. இது திதி விரதமாகும் ..
“ சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான் “ என்று வேடிக்கையாகக் கூறுவார்கள் .. 
அவன் சட்டியிலே - சஷ்டித் திதியிலே ! 
மா அறுத்தான் - மாமரமாக நின்ற சூரபத்மனை அறுத்தான்
என்பதையே ! அவ்வாறு கூறியுள்ளனர் ..
முருகன் சூரபத்மனுடன் ஆறுநாட்கள் தொடர்ந்து போரிட்டு ஆறாம்நாள் மாமரமாகி எதிர்த்துப் போரிட்டவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான் .. பிளந்த ஒருகூறு - மயிலாயிற்று .. அதனை தன்வாகனமாக ஏற்றான் ..
மறுகூறு - சேவலாயிற்று .. அதைத்தன் கொடியாக ஏந்தினான ..
வேல் என்றால் கொல்லும் ஆயுதம் அல்ல .. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டு பொருள் .. அதனால்தான் வேல் ! வேல் ! வெற்றிவேல் ! என்று முழக்கமிட்டு வழிபடுகிறோம் .. பக்தர்களின் பிறவித் துன்பத்தை களையவரும் வேல் நம்மை முருகன் திருவடிகளில் சேர்க்கும் என்பதே சூரபத்ம வரலாற்றின்மூலம் அறியப்படுகிறது ..
கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம்
முதலான பக்திகவச நூல்களை பாராயணம் செய்வது சிறப்பு .. கவசம் என்பது ஆபத்தான காலத்தில் எமது உடலை பாதுகாக்க அணியும் ஒருகருவி எனலாம் .. ஆனால் கந்தசஷ்டி கவசம் எம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் .. தீமைகள் .. கஷ்டங்களிலிருந்தும் .. மும்மல
தோஷங்களின் தாக்கங்களில் இருந்தும் எம்மைக் காக்கின்றது ..
ஆணவப்பேய்களான - நான் ! என் ! என்பவை அடக்கி எல்லாம் நீதான் எனநினைக்க வைத்து .. கருணை மழைபொழியும் ஆரணங்களுடன் அமர்ந்த சஷ்டிநாதனே! நின்பாதம் சரணடைகின்றோம் ! காத்தருள்வாயாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment