sWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS OF BHAGAWAN BRIHASPATI .. MAY HE SHOWER YOU WITH WEALTH .. FORTUNE FAME AND GOOD LUCK .. AND REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE TOO .. " JAI SHREE GURU DEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் குருபகவானாகிய ப்ரஹஸ்பதியைப் போற்றித் துதித்து 
தங்களனைவரது எண்ணங்கள் யாவும் ஈடேறவும் .. எங்கும் எதிலும் வெற்றியைக்காணவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் வசந்தம் வீசிடவும்
பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ குரு ப்ரசோதயாத் ! 
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸஹித !
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகம் குரு .. 
இவர் ஒருவரின் வாழ்க்கையில் கல்வி .. தனம் .. குடும்பம் வாக்கு .. மக்கட்செல்வம் .. என்னும் ஐந்துசெல்வங்களை நிர்ணயிக்கச் செய்பவர் .. பெண்களுக்கு கூடுதலாக மாங்கல்யபலத்தையும் அளிக்கக்கூடியவர் ..
“ குருபார்க்க கோடிநன்மை “ என்பது பழமொழி .. அத்தனைசக்திவாய்ந்தது குருவின் பார்வை .. இவர் அமரும் வீட்டைவிட .. பார்க்கும்வீட்டிற்குத்தான் யோகம் அதிகம் ..
” ப்ரஹஸ்பதி “ என்று குருகிரகத்தை அழைப்பார்கள் .. இதன்பொருள் “ ஞானத்தலைவன் “ என்பதாகும் .. விவேகத்தையும் .. அந்தஸ்தையும் .. ஆற்றலையும் .. புத்திரபாக்கியத்தையும் வாரிவழங்குவார் ..
குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி 
மஞ்சள்நிறவஸ்திரம் சார்த்தி வழிபட குருதோஷங்களில்
இருந்து நிவர்த்திபெறலாம் ..
வளமெல்லாம் அளித்திடும் வியாழா போற்றி !
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி ! 
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி ! 
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி ! 
பக்தியுடன் நித்தம் நின்பாதம் பணிவோம் ! 
ப்ரஹஸ்பதியே ! காத்தருள்வாயாக !!
” ஓம் குருவே சரணம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment