SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF GODDESS " MAA LAKSHMI " .. MAY SHE SHOWER YOU WITH HER ASHTALAKSHMI SWAROOPA AND GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வளர்பிறை அஷ்டமித் திதியும் சர்வமங்களங்களையும் தரும் வெள்ளிக்கிழமையுமாகிய இன்று அச்டலக்ஷ்மிகளைத் துதித்து தங்கள்இல்லங்களில் மங்களங்கள் தழைக்கவும் .. அன்பர்களின் துயர்களைந்து மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

1 - நிலைத்த செல்வங்களை பெறவும் .. பெற்ற செல்வங்கள் நிலைக்கவும் .. உங்கள் இல்லம்வரும் அன்னை மஹாலக்ஷ்மியை மனதாரப் பணிந்து சகலபாக்கியங்களையும் பெற சொல்லவேண்டிய 
“ ஸ்ரீமஹாலக்ஷ்மி ஸ்துதி “ இதுவே ! 

ஆதிலக்ஷ்மி நமஸ்தேஸ்து பரப்ரஹ்ம ஸ்வரூபிணி !
யசோதேஹி தனம் தேஹி .. ஸர்வ காமம் ச தேஹிமே !
பொருள் - 
பரப்ரம்ம சொரூபமான ஆதிலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் .. புகழ் .. தனம் .. ஆகியவற்றைக் கொடு 
நம் நியாயமான தேவைகளை நிறைவேற்று .. 

2 - ஸந்தான லக்ஷ்மி நமஸ்தேஸ்து புத்ர பௌத்ர ப்ரதாயினி புத்ரான் தேஹி தனம் தேஹி ஸர்வ காமம் ச தேஹி மே ! 
பொருள் - 
பிள்ளைகள் பேரன்களை அளிக்கும் சந்தான லக்ஷ்மியே உனக்கு நமஸ்காரம் ! நம்சந்ததியருக்கு வாரிசை கொடு 
செல்வத்தைக்கொடு .. செல்வத்தை கொண்டு நிறைவேறும் ஆசைகள் ஈடேற அருள்வாய் !

3 - வித்யாலக்ஷ்மி நமஸ்தேஸ்து ப்ரம்ம வித்யா ஸ்வரூபிணி ! வித்யாம் தேஹிகலாம் ! தேஹி ஸர்வ காமம் ச தேஹி மே ! 
பொருள் - 
பிரம்ம வித்யாசொரூபிணியான வித்யாலக்ஷ்மியே ! 
உனக்கு நமஸ்காரம் ! வித்தைகளைக் கொடு ! கலைகளைக் கொடு ! எல்லா ஆசைகளையும் நிறைவேற்று .. 

4 - தனலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதாரித்ரிய நாசினி தனம்தேஹி ஸ்ரீம்தேஹி ஸர்வ காமம் ச தேஹி மே !
பொருள் - 
ஏழ்மை அழிக்கும் தனலக்ஷ்மியே ! தனத்தைக் கொடு .. திருவைக்கொடு .. எல்லா விருப்பங்களுக்கும் பூர்த்தியைக்கொடு .. 

5 - தான்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வாபரண பூஷிதே தான்யம் தேஹிதனம் தேஹி ஸர்வ காமாம்சதேஹி மே!
பொருள் -
சர்வாபரண பூஷ்தையான தான்யலக்ஷ்மியோடு உனக்கு நமஸ்காரம் தான்யத்தைக் கொடு .. இஷ்டங்களை நிறைவேற்று .. 

6 - மேதாலக்ஷ்மி நமஸ்தேஸ்து கலிகல்மஷ நாசினி 
ப்ரஜ்ஞாம் தேஹி சீரியம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹிமே ! 
பொருள் -
வினைப்பயனைத் தீர்க்கும் மேதாலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் ! எமக்கு ஞானத்தைக்கொடு ! லக்ஷ்மீகரத்தைக் கொடு .. ஆசைகளை நிறைவேற்று .. 

7 - கஜலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வதேவ ஸ்ரூபிணி! அச்வாம்ஸ்ச கோகுலம் தேஹி ஸர்வ காமாம் ச தேஹி மே ! 
பொருள் - 
எல்லா தேவர்களின் அம்சங்களும் உள்ளவளே ! உனக்கு நமஸ்காரம் ! ஆநிரை .. குதிரைகள் .. சுபீஷ்டங்களைக் கொடு ! 

8 - வீரலக்ஷ்மி நமஸ்தேஸ்து பராசக்தி ஸ்வரூபிணி வீர்யம் தேஹிபலம் தேஹி ஸர்வ காமம் ச தேஹிமே! 
பொருள் -
பராசக்தி சொரூபமான வீரலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம் ! எமக்கு வீர்யத்தைக்கொடு .. பலத்தைக் கொடு .. பலிக்கக்கூடிய இஷ்டங்களைக்கொடு 

9 - ஜயலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வகார்ய ஜயப்ரதே ஜயம்தேஹி சுபம் தேஹி ஸர்வ காமம் ச தேஹிமே! 
பொருள் - 
அனைத்துச் செயல்களிலும் வெற்றியைத் தரும் ஜயலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் ! வெற்றியைக் கொடு .. சுபத்தைக்கொடு .. சர்வாபீஷ்டத்தையும் கொடு ..

10 - பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து சௌமாங்கல்ய விவர்தினி பாக்யம் தேஹி ஸ்ரீம் தேஹி ஸர்வ காமாம்ச தேஹிமே ! 
பொருள் - 
சௌமாங்கல்யத்தை அருளும் பாக்யலக்ஷ்மியே!
உனக்கு நமஸ்காரம் ! பாக்யத்தைக்கொடு .. திருவருளைக்கொடு .. எல்லா இஷ்டங்களையும் நிறைவேற்று .. 

11 - கீர்த்திலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷ்ஸ்தலஸ்திதே ! கீர்த்திம் தேஹி ஸ்ரீம் தேஹி ஸர்வகாமாம்ச தேஹி மே ! 
பொருள் - பகவான் மஹாவிஷ்ணுவின் திருமார்பில் வசிக்கும் கீர்த்திலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் ! நீங்காப்புகழ்பெற உன் திருவருளை எனக்குக் கொடு சர்வாபீஷ்டத்தைக் கொடு .. 

12 - ஆரோக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வரோகநிவாரணி ஆயுர்தேஹி ஸ்ரீம்தேஹி ஸர்வ காமாம்ச தேஹிமே ! 
பொருள் -
எல்லா நோய்களையும் தீர்க்கக்கூடிய ஆரோக்கியலக்ஷ்மியே ! உனக்கு நமஸ்காரம் ! நீங்காப்புகழ் பெற உன் திருவருளை எமக்குக்கொடு சர்வாபீஷ்டத்தைக் கொடு .. 

13 - ஸித்தலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸர்வஸித்திப்ரதாயினி ஸித்திம்தேஹி ஸ்ரீம் தேஹி ஸர்வ காமம் ச தேஹி மே ! 
பொருள் - 
எல்லா சித்திகளையும் அளிக்கும் சித்தலக்ஷ்மியே ! 
உனக்கு நமஸ்காரம் ! சித்தியைக் கொடு .. திருவருளைக்கொடு .. எமது எல்லா ஆசைகளையும் நிறிவேற்று .. 

14 - மங்களே ! மங்களாதார மாங்கல்ய மங்களப்ரதே ! மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா ! 
பொருள் - 
மாங்கல்யத்தை அருளக்கூடிய மங்களேஸ்வரியே ! 
மங்களத்தைப்பெற மங்களமயமான மாங்கல்யத்தை எமக்குக் கொடு .. 

15 - ஸர்வமங்கள மாங்கல்யே ! சிவேஸர்வார்த்தஸாதிகே ! சரண்யே ! த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே !
பொருள் - 
எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே !
ஷேமத்தைக் கொடுப்பவளே ! எல்லாவற்றையும் சாதிக்கக்
கூடியவளே ! த்ரயம்பகே ! நாராயணியே ! உன்னைச்சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே ! உனக்கு நமஸ்காரம் !

16 - சுபம் பவது கல்யாணி ! ஆயுளாரோக்ய ஸம்பதாம் ! மம சத்ரு விநாசாய தீபஜோதி நமோஸ்துதே ! 
பொருள் - 
அன்னை கல்யாணியே ! சுபம்நடக்கட்டும் .. ஆயுள் .. ஆரோக்கியம் .. சம்பத்துக்காகவும் .. நம் எதிரிகளின் நாசத்துக்காகவும் .. தீபஜோதியான உனக்கு நமஸ்காரம் 
செய்கிறோம் !! 
“ ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment