Swamiye saranam iyyappa...Guruve saranam saranam....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " AAVANI MOOLAM " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
தென்னாடுடைய சிவனே ! எந்நாட்டவர்க்கும் இறைவனாய் கருணைகொண்டு அருளும் ஆவணிமூல நட்சத்திரமாகிய இன்று இறைவனைத் துதித்து தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி .. 
நல்லாரோக்கியமும் .. புத்துணர்வும் பெற்றிடவும் ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

மதுரை மீனாட்சி .. சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது .. 
இன்று சூரியன் உதயமாகும்போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச்சிந்தினால் இந்த ஆண்டுமுழுவதும் வெயில் கடுமையாக இருக்கும் என்பர் .. மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் சிறப்பான சீதோஷணம் காணப்படும் .. 

சூரியன் போன்ற கிரகங்கள் என்னதான் தங்கள்பணியைச் செய்தாலும் .. இறைவனால் படைக்கப்பட்ட கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க இறைவனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து நல்ல சீதோஷணம் வேண்டுமென பிரார்த்திப்பார்கள் .. இப்பிரார்த்தனை இறைவனின் மனதைக்கனியவைக்கும் .. உலகிற்கு தேவையான நல்ல சீதோஷணமும் கிடைக்கும் என்பதே ஐதீகம் .. 

நாடெங்கிலும் ஆவணி மூலத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் ” மதுரை பிட்டுத்திருவிழா ”
குறிப்பிடத்ததொன்றே ! இக்காலத்தில் வைகைநதிபெருக்கெடுத்தது .. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும் .. பலப்படுத்தவும் மதுரைமக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது .. அவரது ஆணைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன .. 

செம்மனச்செல்வி (வந்தி) என்ற பிட்டுவிற்கும் ஏழை மூதாட்டி வைகை ஆற்றின்கரையின் ஒருசிறுபகுதியைப்
பலப்படுத்தும் கடப்பாட்டுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார் .. முதுமைகாரணமாக அவரால் தனது பகுதிவேலையை செய்யமுடியவில்லை .. ஏழைமூதாட்டியார் மற்றவர் உதவியை நாடினார் .. 

கூலியாள் வடிவில்வந்த சிவபெருமான் உதிந்தபிட்டை ஊதியமாக ஏற்று மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார் .. ஊதியத்தை உண்டபின் தனது வேலையைச் செய்யவென மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார் .. கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது ஆற்றங்கரையில் படுத்துறங்குவதை அவதானித்த மேற்பார்வை அதிகார்கள் கூலியாளை எழுப்பி அவர் வேலையைத் திருந்தச் செய்யப்பணித்தனர் .. 

அதுபலனிக்காதுபோகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினார் .. அத்தண்டனை ஒருசவுக்கடியாக அமைந்தது .. சிவனுக்கு கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்களும் உணர்ந்தன .. பாண்டியமன்னனும் உணர்ந்தார் .. தனது பிழையையும் உணர்ந்தனன் .. என சமயநூல்கள் கூறுகின்றன .. 

இதன்காரணமாக இத்தினம்
“ பிட்டுக்கு மண்சுமந்தவிழாவாக “ கொண்டாடப்படுகிறது
மீனாட்சி சுந்தரேஸ்வரரைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment