SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA MAY HE REMOVE ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH LEADERSHIP QUALITIES AND EVERY SUCCESS IN YOUR CAREER TOO .. " JAI SHREE SURYA DEV " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆவணி ஞாயிறு இறுதிவாரமுமாகிய இன்று சூரியபகவானைத் துதித்து பிரச்சினைகள் அனைத்தையும்
எதிர்கொள்ளச் சக்தியையும் .. மனோதரியத்தையும் தந்தருளி .. தங்கள் வாழ்வில் ஒளிதந்து .. இருள்நீக்கி .. நலம்தந்து வாழ்வில் வளம்சேர்க்கும் ஒப்பிலா கதிரவனைப் பிரார்த்திப்போமாக ! 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ! சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

ஞாயிறு என்றால் சூரியன் .. அந்த சூரியன் ஆட்சிபெறும் மாதம் ஆவணி .. இந்தமாதத்தில் சூரியனின் அருள்வேண்டி இருக்கும் நாளே ஆவணி ஞாயிறு விரதமாகும் .. 

ஆவணிமாதத்தில் ஒவ்வொரு ஞாயிறுகாலை 6 - 7 மணிவரை சூரியஹோரையே இருக்கும் .. இந்த ஹோரையில் சூரியனை ..
“ ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா “ என்று 3 முறைகூறி வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை அள்ளித்தருவான் ஆதவன் .. 
கண் .. தோல் பிரச்சினைகள் ..இல்லங்களில் உள்ள தீயசக்திகளும் அகலும் .. 

ஆவணி என்றால் “ மாதங்களுக்கு எல்லாம் அரசன் “ என்று பொருள் .. 
சிங்கத்திற்கு ( ஆவணி ) இணையான மாதமும் இல்லை .. சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை ! என்கிறார் அகத்திய முனிவர் .. 

ஆதவனை வணங்குவோருக்கு சுடர்மிகும் அறிவுடன் .. சுட்டும்விழிச்சுடரான கண்பார்வை கிட்டும் .. மாறுபட்ட குணாதிசயங்கள் உள்ள பலபேரை ஒரேதிசையில் வழிநடத்திச் செல்லக்கூடிய தலைமைகுணம் கிட்டும் .. 

நேர்மையானவழியைமட்டுமே மனசு எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும் .. நேர்கொண்ட பார்வையும் .. புவியில் யாருக்கும் அஞ்சாத வைரநெஞ்சமும் கிட்டும் .. 

ஆலயங்களில் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக உள்ளவர் சூரியனே ! சிவசூரியனுக்கு ஒருமுகம் .. இருகைகளில் வெண்தாமரையை வைத்திருக்கிறார் ..
ஏனைய இருகரங்களும் அபய .. வரத ஹஸ்தங்களாக உள்ளன .. சூரியன் ஏழுகுதிரைகளைப் பூட்டிய வண்டியில் சஞ்சாரம் செய்வார் .. அவர் மாதுளம்பழ நிறத்தவர் ..

பண்பாளர் உளம் இருந்து அகலாமல் வாழ்விக்க சூரியபகவானைப் போற்றுவோம் ! ஓம் சூர்யாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

No comments:

Post a Comment