பன்வேல்குடியிருக்கும் பாலகனே
நினைவு மலராலுனை
குரு அர்ச்சனை
நிதமே செய்வதால்
நீங்காமல் எம்மைக் காப்பாய்
நீங்காமல் எம்மைக் காப்பாய்
நினைவு கைப்பட நிதமுனை
வேண்டினேன் அடியவர் மனமலரில்
குடியிருக்கும் சீலனே
வடிவழகுடன் வரங்கொடுக்கும்
பன்வேல் பாலகனே
சிரமேல் கரம் குவித்தேன்
குவித்த கரத்திடை நீ தெரிந்தாய்
உதித்த சூரியன் போலவே
விதித்த விதியை நீ கலைத்தாய்
புதிய விதியை நீ படைத்தாய்
பன்வேலில் வாழ்கின்ற பனிநிலவே
குருவடிவால் குறை தீர்க்கும்
அருள் வடிவே
உனையே வணங்கினேன்
எமைப் பாருமய்யா!
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இப்புனித நன்னாளில் தங்களனைவரும் இக பர சுகங்களுடன் ஸ்ரீமன் நாராயணனின் அருட்கடாக்ஷ்மும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய சுக்லபக்ஷ் ஏகாதசியை பார்ஷ்வா ஏகாதசி என்றும் .. வாமன ஏகாதசி என்றும் அழைப்பார்கள் .. ஒருவரது பாவங்கள் அனைத்தையும் நீக்கி உயர்வு அளிப்பதால் இதை “ ஜெயந்தி ஏகாதசி “ என்றும் அழைப்பார்கள் ..
விரதங்களில் மேன்மையானது ஏகாதசிவிரதம் .. அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் மேன்மையானது
“ வாமன ஏகாதசியாகும் “ .. மூன்று லோகங்களிலும் இதற்கு இணையான நாள் கிடையாது .. என்று ஸ்ரீகிருஷ்ணபகவான் மன்னர் யுதிஷ்டிரருக்கு மொழிந்துள்ளார் ..
இந்நாளில் உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிப்பவர் அஸ்வமேதயாகம் செய்ததற்கு இணையான புண்ணியத்தைப் பெறுவர் .. மோட்சப்பிராப்தியை எளிதில் அடைவதற்கான மார்க்கத்தை அருளும் இந்நாளுக்கு இணையான வேறு எந்த ஏகாதசி நாளும் இல்லை .. ஆகவே இன்னல் நிறைந்த இவ்வுலக வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து விடுதலைபெற விரும்புவோர் வாமன ஏகாதசியன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கவேண்டும் ..
விரதவழிமுறைகளின்படி விரதத்தைக் கடைபிடிப்பவர் தாமரை இதழ்களை ஒத்த கண்களுடன் மூன்று அடிக்கும் குறைவாக சிறு ( குள்ள ) ரூபத்தில் பகவான் மஹாவிஷ்ணு “ வாமனராக “ அவதாரம் எடுத்த வடிவில் வழிபடவேண்டும் ..
வாமன அவதார ரூபத்தில் மஹாவிஷ்ணுவை வழிபடுபவர் பிரம்மா .. விஷ்ணு .. சிவன் மற்றும், அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வழிபட்ட புண்ணியத்தை பெறுவதோடு இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஸ்ரீஹரியின் இருப்பிடமான வைகுண்டப்பிராப்தியையும் பெறுவர் ..
சயன நித்திரையில் ஆழ்ந்திருக்கும் விஷ்ணுபகவான் தன்னுடைய சயனகோலத்தை மாற்றும் நாள் இன்றே ! இத்திருநாளில் பகவான் இடது புறத்திலிருந்து திரும்பி வலது புறம் சயனிப்பார் .. ஆதலால் வாமன ஏகாதசி மிகவும் சுபமங்கள நாளாக முக்கியத்துவம் பெறுவதுடன்
“ பரிவர்த்தனி “ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது ..
நாள்முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் .. பகவத் புராணம் கீர்த்தனைகள் என்று பகவானின் நாமங்களை பாராயணம் செய்து ஏகாதசி விரத மஹாத்மியத்தை கேட்டோ .. படித்தோ வந்தால் அவர்களது பாவங்கள் நீங்கி புண்ணியத்தை அடைவர் ..
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment