SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ALL THE ETERNAL BLISS AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " JAI BHOLE NATH ..




விதியென்னும் வடிவில் எது வந்தாலும்
பாலகன் எழில் முன்  வந்து காக்கும்
கதியில்லை எமக்கெனக் கை கூப்பி நின்றால் 
 
பாலகன் கரம் வந்து காக்கும்
பழி நேரந்ததன்று பரிதவித்து நின்றால் 
பதினெட்டாம் படி வந்து காக்கும்
வழியின்றி வாடும் மாந்தர் வந்தால்
வலுவான உன் தோள் காக்கும்
மதி கெட்ட மக்கள் மனமுடைந்து வந்தால் 
பன்வேல் பாலகன் மதி முகம் வந்து காக்கும் 
வளமான வாழ்வைத் தொலைத்து நின்றால்
வந்து நிற்கும் குருவின் ஆசி என்ற மருந்தே காக்கும்
இளங்குருத்தான பிள்ளைகளின் வளமான வாழ்வுக்கு
பாலகன் மலர்ப்பாதம் வந்து காக்கும் 
இறை நாடி வந்த அடியார்களை 
என் குருநாதரின் நிதம் செயும் பூஜை காக்கும்



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் சதுர்த்தசி திதியும் வருவதால் நடேசரபிஷேகத்திற்கும் சிறப்புமிக்க நாளுமாகும் .. ஆடலரசனாகிய நடராஜப்பெருமானைத் துதித்து தங்கள் வாழ்வில் என்றும்
ஆனந்தமும் நல்லாரோக்கியமுமிக்க வாழ்வும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் சித்ஸ்பேசாய வித்மஹே ! 
சிதாகாசாய தீமஹி ! 
தந்நோ சபேச ப்ரசோதயாத் !! 

திருக்கோவில்களில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது என்பதை கேள்விப்பட்டிருப்போம் .. இதேபோல் சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட சிலகோவில்களில் அங்குள்ள நடராஜருக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறையே சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன .. 

மானிடர்களுக்கு ஒருவருடம் என்பது .. தேவர்களுக்கு ஒருநாள் .. ஒருநாளிலே வைகறை .. காலை .. உச்சி .. மாலை .. இரவு .. அர்த்தஜாமம் ஆகிய ஆறுபொழுதுகள் உண்டு .. 

தேவர்களுக்கு மார்கழிமாதம் - வைகறை பொழுது ..
மாசிமாதம் - காலை பொழுதாகும் ..
சித்திரைமாதம் - உச்சிகால பொழுது ..
ஆனி மாதம் - மாலைப்பொழுது ..
ஆவணிமாதம் - இரவுப்பொழுது .. 
புரட்டாதி மாதம் - அர்த்தஜாமப்பொழுது .. 
எனவே ஆவணி சதுர்த்தசி திதியாகிய இன்று இறைவனுக்கு இரவுநேர அபிஷேகம் சிறப்பாக நடைபெறும் .. 
இந்த ஆறுஅபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான் கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகாலபூஜைகள் நடத்தப்படுகின்றன .. 

மனிதனுடைய இதயத்தில் இருக்கின்ற இறைவனே ! சிதம்பரம் பொன்னம்பலத்திலும் இருக்கின்றார் என்பதை
உணர்த்தவே மனித உடல்போல் அம்பலம் அமைக்கப்பட்டுள்ளது .. மனித உடலில் இதயம் நடுவே இல்லாமல் இடதுபுறம் தள்ளியிருப்பது போல மூலஸ்தானம் திருக்கோவிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது .. 

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும் .. சித்சபையில் சபாநாயகரின் வலது
பக்கத்தில் உள்ள திரைஅகற்றப்படும் போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும் .. இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை ..
தங்கத்தாலான வில்வதள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் .. மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வ தளமாலை தொங்கும் ..இதன் ரகசியம் - ” இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் ” என்பதை உணர்த்துவதேயாகும் .. 
அகண்டபெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெட்டவெளியையே காட்டி இங்குவழிபட வகைசெய்யப்பட்டுள்ளது .. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது ..
மூர்த்தி .. தலம் .. தீர்த்தம் இவற்றுக்கு ஒருமிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும் .. 

அண்டிவரும் அனைவரையும் அஞ்சவேண்டாம் ! எனக்கூறி அபயம் எனும் அருள்தரும் வலக்கையும் .. இம்மையிலும் .. மறுமையிலும் வரம்தரும் தூக்கிய இடதுதிருவடி (குஞ்சிதபாதம்) பாபங்களைக் களையும் .. 
முயலகன் எனும் அரக்கனின் மேல் ஊன்றிய வலதுதிருவடி தரிசனம் செய்தோர் திரும்பவும் தரிசிக்க ஈர்க்கும் காந்தவடிவம் கொண்டு அன்பர்களுக்கு என்றும் அருள்பாலிக்கிறார் .. 

இதயம் எனும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார் .. இதைக்கண்டு
தரிசிப்போர் வாழ்வில் என்றும் ஆனந்தமே ! 
இந்நாளில் அவனே ! அவனே ! என்று கூறாமல் சிவனே ! சிவனே ! என்று கூறிவாழ்த்தி வணங்கி எல்லா நலமும் 
பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றென்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment