அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பௌர்ணமித் திதியும் .. வெள்ளிக்கிழமையுமான இந்நாளில்துர்க்கை அம்மனைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் சகலதுறைகளிலும் வெற்றியும் மனதில் நிம்மதியும் .. மகிழ்ச்சியும் தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் ..
காத்யாயனாய வித்மஹே !
கன்யாகுமரீ ச தீமஹி !
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !!
சிறப்பான திதிகளில் ஒன்று பௌர்ணமி .. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக்கொள்வதால் இந்த பௌர்ணமியோகம் உண்டாகிறது .. சந்திரன் அம்பாளின்
அம்சமாக ஜோதிட .. வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன ..
கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்றநாளாகிய இன்று கடல் தன் இயல்புநிலையிலிருந்து மாறி சற்று சீற்றத்துடன் கொந்தளிக்கும் .. அதுபோல் நம்மனமும் அமைதியில்லாமல் அலைபாயும் .. மனோவியாதி உள்ளவர்களுக்கு பௌர்ணமித் தினம் சற்று கடினமான தினமாகவே இருக்கும் .. சந்திரன் மனோகாரகன் மனத்தை ஆள்பவன் .. அதனால் பௌர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்கின்றன சாஸ்திரங்கள்
பௌர்ணமித் தினத்தில் அம்பாள் வழிபாடு மிகவும் சிறப்பானது .. ஸ்ரீசக்கரநாயகியாக ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக மஹாதிரிபுரசுந்தரியாக பௌர்ணமியன்று
அருள்பாலிப்பதாக ஐதீகம் உண்டு ..மேலும் ஸ்ரீசந்திரிகா என்ற அவதாரத்திலும் துர்க்கையின் அம்சத்திலும் அம்பாள் இருப்பதாக சித்தர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர் ..
துர்க்கம் என்றால் - அகழி என்று பொருள் .. நம்மிடம் சத்ருக்களை நெருங்கவிடாமல் அகழிபோல் நின்று காப்பவள் .. ஆகையால் அன்னைக்கு துர்க்கை என்று பெயர்வந்தது .. நம்துக்கங்களையும் இடையூறுகளையும் நோய்நொடிகளையும் .. தீவினைகளையும் அடியோடு போக்கும் சக்தி அன்னைக்கு உண்டு ..
துர்க்கை என்று துதிப்பவரை துணைகொள்வாயே ! என்றும் நம் அருகில் இருந்து ஆதரிப்பாயே ! அன்னையே !
உன்புகழை நாம் என்றும் மறவோம் ! உன்நாமம் என்றென்றும் பாடிடுவோமே ! எமைகாத்தருள்வாயே ! அன்னை துர்க்கையே ! நின்பாதம் சரணம் ! சரணம் !
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment